பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ல் 2784 திற்கும் உள்ள ஒற்றுமையை ஒர் ங் து உணர்ந்து கொள்வர். சுற்றம் வளைந்து வர வெற்றி விளேங்து வரும். உறவினர் சூழ்ந்துவர வாழ்ந்து வருவது ஒருவனது வாழ்க்கையில் உயர்ந்த பேரும், மக்கட் பேறு போல் ஒக்கற் பேறும் மிக்க் மாட்சியாய் மேவியுளது. சுற்றம் மிகப் பெற்றவன் எங்கும் துதிமிகப் பெறுகின்ருன். தன்னேச் சார்ந்தவருக்கு உதவி புரிந்து வருவதே ஒருவன் செல்வம் பெற்றதற்கு உரிய பெரிய பயனும். அந்தப் பயனே இழந்துவிடின் அவன் பழி படிந்தவ கிைருன். ஆகவே வாழ்வு பாழ்படிந்து கழிகிறது. நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்; கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்; விடுக்கும் வினே யுலந்தக் கால். (நாலடி 93) உற்ற சுற்றத்தார்க்கு உதவி வருபவனே செல்வம் பெற்ற பலனே ப் பெறுகின்ருன். அவ்வாறு உதவாது ஒழியின் அவன் ஒன்றுக்கும் உதவாதவனுய் இழிந்து பழி படிந்து கழிந்து போகின்ருன். இனிய நீர்மை பெரிய சுற்றங்களேப் பெருக்கி வரும். இவ் வுண்மை சகரன்பால் தெரிய வந்தது. சரி த ம் இவன் சூரிய குலத்து வேந்தன். அயோத்தியில் இருந்து அரசு புரிந்தவன். சிறந்த மதிமான். உயர்ந்த போர் வீரன். பெருங்கொடையாளன். அசுவ மேதம் என்னும் யாகத்தை யாரும் வியந்து புகழ இவன் புரிங் தருளினுன். விதர்ப்பை, சுமதி என்னும் மனேவியர் இரு வரை மணந்து அரிய போகங்களே நுகர்ந்து உலகம் உவந்து வர இவன் அரசுபுரிந்து வந்தான். யார் வந்து எதைக் கேட்டாலும் இல்லே என் மைல் உள்ளம் உவந்து வழங்கி வந்தான் ஆதலால் முதல் வள்ளல் என்று இவன் புகழ் மிகப்பெற்ருன். இவனுடைய தாய் வழி யிலும் தங்தை வழியிலும் உறவினர் பலர் கல்வி செல்