பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழா ல், 2783: இவற்ருல் இவ் வேந்தனுடைய கிளேப்பெருக்கங்: களே நன்கு உணர்ந்து கொள்கிருேம். கொடையும் இன் சொல்லும் உடையவன் அடுக்கிய சுற்றத்தால் சூழப் படுவான் என்பதை இவன் உற்று உணர்த்தி கின்ருன். ஈகையுடன் இன்சொல் இயம்பிவரின் எல்லாரும் ஒகையுடன் கோள்வர் உறவு. உறவினர் உவந்துவர ஒழுகு. 526 வள்ளல் வரகுணன் போல் மாநிலத்தில் ஏன்கிளேயைக் கொள்ளவில்லை மற்ருேர் குமரேசா-உள்ளும் பெருங்கொடையான் பேணுன் வெகுளி யவனின் மருங்குடையார் மாநிலத் தில். (சு) இ-ள். - * - குமரேசா வள்ளலான வரகுணன் மிக்க கிளேஞசை ஏன் என்றும் பக்கத்தே பெற்றிருந்தான் ? எ னி ன், பெருங் கொடையான் வெகுளி பேணுன் அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் என்க. உறவை வளர்க்கும் உபாயம் தெரிய வந்தது. பெரிய கொடையும் கோபம் கொள்ளாமையும் உடையயிைன் அவ ன் போல் கிளைஞரை யுடையார் உலகில் யாரும் இலர். மாநிலம் =பெரிதாய் விரிந்து பரந்துள்ள உலகம். கொடைக்குப் பெருமை யாது? கொள்ள நேர்ந்த வர் சிறுமை யாவும் நீங்கிப் பெருமை ஓங்கத் தருவது. சிறு கொடைகளும் உள. ஆதலால் அவற்றினும் வேறு பாடு தெரியப் பெருங்கொடை என்ருர். எந்த வகை . யான கொடையும் எவரையும் வசப்படுத்திவரும் ஆத லால் அந்த அதிசய வசியம் இங்கே முந்துற வங்தது. பேணுன்=விரும்பிக் கொள்ளான். வெகுளும்படியான காரிய ம் நேர்ந்தாலும் அது விரைந்து மறைந்துபோம். சினத்தைப் பேணுதவன் மனத்தை ஒர்ந்து பேணி இனத்தவர் சூழ்ந்து கிற்பர்.