பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2784 திருக்குறட் குமரேச வெண்பா மருங்கு=பக்கம்: ஒழுங்கு: செல்வம். இது இங்கே அதிகார முறையால் பக்கத்தே சுற்றி கிற்கும் சுற்றத்தாரைத் குறித்து கின்றது. சுப அசு பங்: களில் மருங்கே வந்து ஒருங்கே உரிமையுடன் மருவி கிற்பவர் உறவினர் ஆதலால் அவர் ஈண்டு மருங்கு என நேர்ந்தார். இவ்வாறு நேர்வது ஆகு பெயராம். இலக் கனே என்பது வடமொழி வழக்கு. ஒக்கல் கிளைஞர் கேளிர் எ ன ச் சுற்றத்தாரைக் குறித்துவரும் பெயர்கள் எல்லாம் காரணக் குறிகள் உடையன. உற்று நோக்கி உணர வுரியன. உற்றவர் இகுளே நட்டோர் உறவு ஒக்கல் கிளேயே சார்ந்தோர். பற்றினர் சிறந்தோர் நட்புப் பந்தமே பரிசனம் கேள் குற்றமில் நண்பு கூளி குடும்பமே கடும்பு நள்ளி சுற்றம் மூவாறு பேரும் சூழ்ந்த பாசனமும் சொல்லும். (நிகண்டு) சுற்றத்துக்கு இவ்வாறு பத்தொன்பது பெயர்கள் இதில் வந்துள்ளன. யாவும் காரணப் பேர்கள். கருதி உணர்ந்து கொள்க. சொல்லுக்கு உரிய பொருள்களேத் துருவி அறிந்து கொள்வது நல்ல கல்விப் பயிற்சியாம். பெருங் கொடையாளன் ஆயினும் வெகுளியைப் பேணிவரின் அவன் பக்கத்தே உறவினர் உரிமையாய் உவந்து கூடார் ஆதலால் வெகுளி பேணுமை அவர் கூடி வருதற்கு ஏதுவாய் வந்தது. கொடுத்தலையும் இன் சொல்லேயும் முன்பு குறித் தார்; வெகுளாமையை இதில் சேர்த்தார். உலோபமும் கோபமும் கடுஞ் சொல்லும் சுற்றத்தாரைச் சுற்றவிடா: அயலே எற்றிவிடும் ஆதலால் அவ்ற்றை உடையான் உறவினங்களின் உரிமைகளே அடையான். கிளேகள் கிளர்ந்து வளர்ந்துவர வாழ்வதே உயர்ந்த வாழ்வாம். . ஈகையும் இதமும் அமைதியும் உடையவன் தன் மருங்கே பெருங்கிளேகள் பல பெருகி நிற்கப் பெரு. மேன்மைகளுடன் உயர்ந்து விளங்குவான். சுற்றத்தார்