பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சு ற் ற ம் த ழ ா ல் 2785 உவந்து சூழ்ந்துவர வாழ்ந்து வருபவன் யாண்டும் வெற்றித் தார். வேந்தனய்ச் சிறந்து திகழ்கின்ருன். சுற்றம் சுற்றிவரும் அளவே கொற்றவன் கொற்றம். நல்ல நீர்மையாளன்பால் எல்லாரும் கேளிராவர். இவ்வுண்மை வரகுண பாண்டியன் பால் தெரிய வந்தது. ச ரி த ம். இம்மன்னன் மதுரையம்பதியிலிருந்து அரசு புரிங் தவன். சவுந்தரேசபாண்டிய மன்னனுடைய அருமைத் திருமகன். அழகு அறிவு அருள் அமைதி நீதி வீரம் கொடை நேர்மை முதலிய நீர்மைகள் எல்லாம் இவனிடம் சிர்மையாய் நிறைந்திருந்தன. தன் பெயரியல்புக்கேற்ப உயர் குணங்கள் உடையவன் என்று உயர்ந்தோர் இவனைப் புகழ்ந்து வந்தனர். ஈசன் பால் பேரன்புடைய வன். கண்ணுதற் கடவுளேக் கருதுங்தோறும் உள்ளம் உருகிக் கண்ணிர் வெள்ளமெனச் சொரிந்து மெய்ம் மறந்து நிற்பன். இவனது அன்பு அதிசயம் உடையது. வேந்தர் சேகரன் வரகுணன் விண்ணிழி கோயில் ஏந்தல் சேவடி யிறைஞ்சிநின் றிறையருட் பெருமை ஆய்ந்த வாவுதன் னகம்புக இன்பமோடு அன்பு தோய்ந்து தாரை நீர் துளும்பநாக் குழறிடத் துதிப்பான். (திருவிளையாடல் 40) இவனது பத்திப் பரவச நிலையை இதில் உய்த்து உணர்ந்து கொள்கிருேம். மதுரைமா நகர் போலவே திருவிடைடிருதுரரில் கோயில்கொண்டு எழுந்தருளி புள்ள சிவபெருமானுக்குத் திருப்பணிகள் பல விருப் புடன் புரிந்து தொழுது வழிபட்டு வந்தான். இவனது பத்திநிலை அதிசய நிலையில் பெருகியிருந்தது. முற்றத் துறந்த பட்டினத்தடிகளும் இவனுடைய அன்பின் பரவச கிலேகளே உள்ளம் உவந்து வியந்து புகழ்ந்துள்ளார். வெள்ளிே நீறு மெய்யில் கண்டு கள்ளன் கையில் கட்டவிழ்ப் பித்தும்; ஒடும் பல்நரி ஊளே கேட்டு அர னைப் பாடின என்று படாம்பல அளித்தும், 5 குவளைப் புனலில் தவளை அரற்ற -- 349