பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம், த ழ ா ல் 27.87 527 பூதன் உயர்பந்தன் புண்ணியன் முன் ஈந்துவந்தேன் கோதறுசீர் கொண்டார் குமரேசா-யாதெனினும் காக்கை கரவா கரைந்துண்னும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே யுள. (எ) இ-ள். குமரேசா ! ஈந்துவந்த பூதன் பங்தன் புண்ணியன் - என்பவர் என் ஆக்கம் மிகப் பெற்று உயர்ந்து வாழ்ந் 'தார் ? எனின், காக்கை காவா கரைந்து உண்ணும் ஆக்கமும் அன்ன ரோர்க்கே உள என்க. ஆக்கம் அடையும் வழி அறிய வந்தது. காகம் இரையை மறையாமல் த ன் இனத்தை அழைத்து உண்டு வரும்; அந்த இயல்பை உடைய உயர் கிலே யாளர்க்கே செல்வங்கள் உளவாம். ஆக்கம் வேண்டும் எ ன் று யாவரும் ஆசையுறு கின்றனர்: அதனை அடைதற்குப் படாத பாடுகள் படு கின்றனர். வருங்தி முயன்ருலும் சிலரிடமே சிறிது அது வந்து சேர்கிறது. அத்தகைய அருமைத் திரு உரிமை யாக ஒருவனிடம் பெருகிவர வேண்டுமால்ை அவன் என்ன செய்ய வேண்டும்? தனது உறவினரை உரிமை யோடு பேணி ஊட்டி உபசரித்து வரவேண்டும். இவ் வுண்மை ஈண்டு துண்மையாய் உணர வந்தது. ஒக்கல் உவந்து வருவதில் உயர்ந்த தருமங்கள் மருமங்களாய் மருவி வருகின்றன. அவ்வரவுள் திரு பெருகி வருகிறது. ஆக்கமும் என்றதிலுள்ள உம்மை அதன் அருமை யையும் சிறப்பையும் குறிப்பா உணர்த்தி நின்றது. ஆக்கமே அன்றி அறமும் புகழும் இன்பமும் உளவாம் என்பதும் இதில் உணர வந்துள்ளது. முன்னது சிறப் பும்மை; பின்னது எச்சவும்மை. கரவர்=மறையாததாய். கரத்தல்=மறைத்தல். -- கரைந்து= அழைத்து. கரைதல்=கூவுதல்: கத்தல். காவா கரைந்து என இயல்பாப் இயைந்தது.