பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. சு ற் ற ம் த ழ் ல் 2789 காகத்துக்குப் பலியிடுவதை ஒரு தெய்வ பூசை போல் மாந்தர் யாண்டும் செய்து வருகின்றனர். தேவ தையிடம் வரம் வேண்டுவது போல் அதனிடமும் உரிமையோடு முறையிட்டு வழிபாடு புரிகின்றனர். மறுவில் துாவிச் சிறுகருங் காக்கை! அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனே கலத்தில் தருகுவென் மாதோ! வெஞ்சின விறல்வேல் காளையொடு அஞ்சில் ஒதியை வரக்கரைந் தீமே. - - * (ஐங்குறுநூறு 391). தலைவனுடன் சென்றுள்ள தனது அருமை மகள் அகமாய் மீண்டுவந்து சேரவேண்டும் என்று காக்கையை நோக்கி ஒரு தாய் இவ்வாறு வேண்டியிருக்கிருள். * அழகிய சிறகுகள் உடைய கரிய இனிய காக்கையே : என் மகள் இங்கு விரைந்து வரும்படி கரைந்தருள்; அன் புடைய உன் கிளேகளோடு நீ உண்டு மகிழ நல்ல சுவை உணவை பொன் கலத்தில் உனக்கு நான் ஊட்டுவேன்" என்று அந்த அன்னே இவ்வண்ணம் பரவி யிருத்தலால் காகத்தின் வழிபாடு பண்டைக் காலங் தொட்டே இக் காட்டில் நடந்து வந்துள்ளதைத் தெளிந்துகொள்கிருேம். அன்புடை மரபின் கின் கிளையோடு ஆர என்று குறித்தி ருப்பது இங்கேகூர்ந்து சிந்திக்கவுரியது. ஆர=உண்ண. ஆர்க்கும் இடுமின் ! அவரிவர் என்னன்மின் ! பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்: வேட்கை யுடையீர்! விரைந்தொல்லை உண்ணன்மின் ! காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே! (திருமந்திரம் 250, உயிர்களுக்கு ஊட்டி உண்ணும்படி திருமூலர் இஷ் வாறு கூறியிருக்கிருர். காக்கை கரைந்து உண்ணும் என்பதை இங்ங்னம் எடுத்துக் காட்டியுள்ளார். உற வோடு கலந்து உண்டு வருவதில் காகம் உயர்வடைந்து வந்துள்ளதை உயர்ந்தோரும் உவந்து வியந்துள்ளனர்.