பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2444 திருக்குறட் குமரேச வெண்பா இந்த இயல் விதி இங்கே சிந்திக்க வுரியது. சிற்றினத்தைச் சேர்வதால் விளேயும் இழிநிலைகளே யும் பழிதுயர்களேயும் பெரியோர்கள் நன்கு தெரிவராத லால் பெருமை அஞ்சும் என்ருர். பெரியார் அஞ்சுவர் என்னுமல், பண்பின் மேல் வைத்து இவ்வாறு கூறியது ஏன்? எனின், அவ்வாறு அஞ்சுவதே அவரது இயல்பு: அந்த அச்சத்தின் அளவே அவருடைய பெருந்தகைமை உச்சமாய் உயர்ந்து ஓங்கி வரும் என்பதை ஊன்றி ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. சிறியார் இனத்தைச் சேர ஒட்டாதபடி பெரியாரைத் தடுத்துப் பாதுகாத்து வரும் கருவிகள் எவை? அவை அறிவு அச்சம் வெறுப்பு அருவருப்புகளாம். தெளிந்து உயர்ந்துள்ள பெரியோர்கள் இழிந்து தாழ்ந்துள்ள சிறியோர்களே எவ்வகையிலும் சேர மாட்டார்கள். /சிற்றினத் தவரொடும் செறிதல் சீரிதோ? (இராமா : 6 : 4-74) சிற்றினத்தாரோடு யாதும் சேர லாகாது என இவ்வாறு சாம்பவன் இராமபிரானிடம் கூறியுள்ளான். இழுக்கல் இயல்பிற் றிளமை; பழித்தவை சொல்லுதல் வற்ருகும் பேதைமை;-யாண்டும் செறுவொடு நிற்கும் சிறுமை;இம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். (திரிகடுகம் 14) சேரக்கூடாதவரை இது தெளிவாத் தெரிவித்துளது. சிறுமைக்கு நேரே மாருகி நிற்பது பெருமை. ஆகவே சிறுமையாளரைப் பெருமையாளர் அணுகாது அகன்று போவது இயல்பாய் நேர்ந்தது. அஞ்சும் என்ற குறிப்பால் சிற்றினத்தின் நஞ்சுத் தன்மை நன்கு தெரிய நின்றது. இழிபுலேகளான தீமை களேயே பழகிவருபவராதலால் சிறியரோடு சேரநேரின் பழிபாவங்களே நேரும்: நேரவே இம்மையும் மறுமை யும் இழந்து எவ்வழியும் அழிதுயரங்களே அ ைட ய வரும். புல்லரை அணுகின் பொல்ாப் புலேயே புகும்.