பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2447 தீயவரைத் தூயவர் சேராரே, தீயவரே தீயவரைச் சேர்வர் செறிந்து. தியாரைச் சேரேல். 452. கோடாத கைகேசி கோடினளே கூனியுடன் கூடியதால் என்னே குமரேசா-கூடும் நிலத்தியல்பால் நீர்திரிந் தற்ருகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு. (உ) இ-ள் குமரேசா! கோடாத மனமுடைய கைகேசி கூனி யுடன் கூடியதால் ஏன் கிலே திரிந்து மாறிள்ை? எனின், நிலத்து இயல்பால் நீர் திரிந்து அற்று ஆகும்: மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பு ஆகும் என்க. நிலத்தின் தன்மையால் நீர் நிலைமாறி அதன்படி யே உருவாம்; அதுபோல் மனிதர்க்கு உரிய அறிவு தாம் சேர்ந்த இனத்தின் தன்மையாய் நேரும். சிற்றினத்தைச் சேராதே; அஞ்சி விலகுக என்று முன்னம் உரைத்தார்: சேர்ந்தால் என்னும்? என்பதை இதில் தெளிய உணர்த்துகின்ருர். பொருளைத் தெளிவாக விளக்குதற்கு உவமை உரி மையாய் வந்துளது. கிலம் இனத்துக்கும், நீர் அறிவுக் கும், சேர்தல் நேர்தலுக்கும் ஒப்பாம். நீர் தனியே இருக்கும்பொழுது வெண்ணிறமாய் இனிய சுவை தோய்ந்துள்ளது. அத்தகைய நீர் எந்த நிலத்தோடு சேர்ந்ததோ அந்த கிலத்தின் சொந்த இயல்பின்படியே நிறம் மாறும்; சுவையும் வேறுபடும். செந்நீர் வெண்ணிர் உவர்நீர் சவர்நீர் நன்னிர் தெளிநீர் கழிநீர் என இன்னவாறு நீர் பேர் பெறுவது அது சேர்ந்த நிலத்தின் வகையாலே யாம். செம்புலப் பெயல்நீர் போல. (குறுந்தொகை, 40)