பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2449 இனத்தியல் பாம்.அறிவு என்பது உண்மையே மனத்துயர் செயுமயல் மாற்றும் நீறுதான் அனிச்சமெல் லடியினர் நுதல் அடுத்தலும் பனித்துடல் வெதும்புமால் படுத்தலால் என்பார். (பிரபுலிங்க, மாயை, 84) பருவ மங்கையர் நெற்றியில் பூசியுள்ள திருநீறு ஆடவர்க்கு மிகுந்த மையலே விளேத்தது. பாச மயலே நீக்க வல்ல நீறு இவ்வாறு கிலேதிரிந்தது, சார்ந்த இனத் தாலாயது: ஆகவே இனத்தியல்பதாகும் அறிவு என்னும் அருள்மொழி உண்மையே என்பது அனுபவத்தால் அறிய வங்தது என இது உரைத்துளது. தேவர் வாய் மொழியைக் கவிகள் எவ்வாறு போற்றி வருகின்றனர் என்பதை இடங்கள் தோறும் கண்டு வருகிருேம். அறிவு உயிரொளியாய் மனிதர்க்கு உயர்வருளி வருகிறது. அத்தகைய ஆன்ம ஒளியை எவ்வழியும் மேன்மையாகப் பேணி வரவேண்டும். நல்லவரோடு சேர்ந்துவரின் அறிவு நல்லதாய் ஒங்கி வரும். தீயவ ரோடு சேரின் அது தீதாய்த் தீங்கு புரியும். துன்பம் உருமல் இன்பமாய் வாழ விரும்புகிறவன் தீய இனத் தை யாண்டும் அணுக லாகாது. நல்லினமே நலம் பல நல்கி யருளும். அதனேச் சேர்வதே சீர்மையாம். பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது நீராய் நிறந்தெரிந்து தோன்ருதாம்-தேரின் சிறியார் சிறுமையும் தோன்ருதாம் நல்ல பெரியார் பெருமையைச் சார்ந்து. (நாலடி 177) பாலோடு கலந்த நீர் பால் ஆதல்போல் பெரியா ரோடு சேர்ந்தவர் பெரியராய் உ ய ர் வ. ர் என இது உணர்த்தியுளது. மேலினம் கீழினம் என்பன மேலான கன்மையும் கீழான புன்மையுமே நோக்கி வந்துள்ளன. சின்னத்தனமான செயல் இயல்களே யுடையது சிற்றினம் என வந்தது. அந்த இனத்தோடு சேரின் எந்த வகையிலும் இழிவுகளேயே அடைந்து நி ங் ைத யு ற நேரும். சிறியாருடைய பழக்க வழக்கங்கள் அறியா 307