பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் து2னக் கோடல் 2403 11. கண்டான் உயர்சோம காந்தன் பிருகுவையேன் கொண்டான்பின் பேணிக் குமரேசா-தண்டாமல் உற்றநோய் நீக்கி உருஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (ഉ_) இ-ள் குமரேசா! பிருகு முனிவரைச் சோமகாந்தன என் ஆணும் வேந்தன் ஏன் உரிமையுடன் பேணிக்கொண்டான்? எனின், உற்ற நோய் நீக்கி உரு.அமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் என்க. நேர்ந்த துன்பத்தை நீக்கி வேறு துயரம் நேராமல முன் அ றி ங் து காக்க வல்ல நல்ல தன்மையாளரை உண்மையான உறவாப் போற்றிக் கொள்ளுக. தெளிந்த அறிவுடையாரைத் தேர்ந்துகொள் என்று முன்பு குறித்தார்; இதில், இடர் களேங்து இதம் புரிவா ரைச் சார்ந்து கொள் என்கின்ருர், உ ற் ற .ே நா ப் என்றது முன்னதாக மூண்டு பற்றிய துன்பங்களே. உருமை = பின்பு உருதபடி. அளபெடை செய்யுள் ஒசையை நிறைக்க வந்தது. பெற்றி=தன்மை: பான்மை. இயல்பாகப் பெற். றுள்ள சீர்மையான நீ ர் ைம பெற்றி என வுற்றது. பேணல்= விரும்பிப் போற்றல். பெரியோர்களே ஏன் பேணிக் கொள்ள வேண்டும்? என்பார்க்கு, அவரால் விளங்து வருகிற உறுதிநலன் களே இதில் உணர்த்தி யருளினர். நோயை நீக்கியரு ளும் மருந்தும், மருத்துவரும்போல் சிறந்த பெருந்தகை மையாளர் ஒதுங்கி யுறைந்துள்ளனர். அவரை நாடித் தேடி நயந்து கொள்பவர் நலம்பல பெறுகின்ருர், நீக்கிக் காக்கும் பெற்றியார் என்ற தல்ை அவரது நிலைமையும் தலைமையும் தெரிய வந்தன. இத்தகைய பெரியோர்கள் உள்ளம் உவந்து தன் பால் அன்பு புரிந்து வரப் பண்பு புரிந்து வேந்தன் ஒழுகி வர வேண்டும்.