பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2458 திருக்குறட் குமரேச வெண்பா மனித அறிவின் மருமம் தெரிய வந்தது. ஒருவனுக்கு அறிவு மனத்துள் இருப்பதுபோல் வெளியே தோன்றச் செய்து அவன் சேர்ந்த இனத்துள் உளதாய் இனிதே எழும். மனம் இனம் இரண்டும் அத்துச்சாரியை பெற்று உருபுகளேப் பெருமல் தொகையாய் கின்றன. எண்ணம் சொல் செயல்களுக்கெல்லாம் மூலநிலைய மாய் எதையும் அறிந்து நடத்துவது எதுவோ அது அறிவு என வந்தது. ஒருவனுக்கு என்றது மனித மரபுக் கெல்லாம் தனியுரிமையாய் நின்றது. மோனே நயம் கருதி மனிதற்கு என்று குறித்திருக்கலாம். அவ்வாறு கூறவில்லை. தெளிந்த அறிவுடையய்ைச் சி ற ங் து வருகிற ஒருவற்கு எனப் பெருமை தோன்ற உரைத்தார். நினைவுக்கு நிலையம் நெஞ்சம். அறிவுக்கு நிலையம் உள்ளம். உள்ளத்திலிருந்தே உணர்வு ஒளியாய்க் கிளர்க் தெழுந்து கருமங்களே மருமமாய்ப் புரிந்து வருகிறது. மனத்துள் மருவி யிருப்பது இயற்கை யறிவு: இனத் துள் பெருகி வருவது செயற்கை அறிவு. நல்ல இனத்தோடு சேரின் அறிவு நல்லதாய் வரும்: கெட்ட இனத்தோடு கூடின் அறிவு கேடாய்த் திரிந்து போம். படித்து வருகிற நூல்களின்படியே அ றி வு தடித்து வருதல்போல் அடுத்து வருகிற இனத்தின்படி யே அறிவு பெருத்து வருகிறது. காமநூல் பயின்றவன் காமி ஞான நூல் பயின்றவன் ஞானி. நல்லவரைச் சார்ந்தவன் நல்லறிஞன். பு ல் ல ைர ச் சேர்ந்தவன் புல்லறிவன். மருவியபடியே அறிவு உருவாகிறது. அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும்-நெறியறிந்த நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பணிப் பற்றுவிட் டாங்கு. " (நாலடியார் 171)