பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2459 இளமைப் பருவத்தில் துட்டரோடு சேர்ந்து கெட்டி ருந்த அறிவு பின்பு நல்லவரோடு சேர்ந்து நல்லறிவாய்த் திருந்தி ஒருவன் உயர்ந்து வந்துள்ளதை இது உணர்த் தியுள்ளது. நல்ல சார்பால் எல்லா நலன்களும் பெருகி எவ்வழியும் இனிமைகளாய் வருகின்றன. எல்லா உடைமைகளையும் எளிதே அடைந்துகொள்ள அறிவுடைமை இனிது அமைந்துள்ளது. அரிய பெரிய திருவாகிய அந்த அறிவு மனத்தாலும் இனத்தாலும் மருவி வருகிறது, சேர்ந்த இனத்தின்படியே அ றி வு நேர்ந்துவிடும் ஆதலால் சிற்றினத்தைச் சேராமல், பேரி னத்தையே எவ்வகையும் யாண்டும் இனிது பேணிச் செவ்வையாய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும், சிலமுற் றுயர்ந்தவர்ச் சேரின் வீடுறும்; மாலையுற் றறிவிலார் மருங்கு அடைந்திடின் வேலேயுற் றலை துரும் பென்ன வெம்பவக் கோலமுற் றிறந்திறந் துழலல் கூடுமால். (பாகவதம்) சிலமுடைய மேலோரைச் சேரின் பேரின்ப வீடு பெறலாம்; கீழோரைக்கூடின் துன்பப் பி ற ப் .ே ப உளதாம் என இது குறித்துளது. சேர்ந்த இனத்தின்படியே அறிவு எங்கும் நேர்ந்து திகழ்கின்றது. இவ்வுண்மை தோடகரிடமும் பாணினி பாலும் நன்கு தெரிய வந்தது. ச ரி த ம் . தோடகர் என்பவர் ஆதிசங்கரருடைய சீ ட ரு ஸ். ஒருவர், அடக்கம் உடையவர். இனிய பண்பினர். ஆசிரி பர்பால் பேரன்புடையவர். சுரேசனர் சதானந்தர் முத லிய பேரறிவாளர்கள் குருவினிடம் பாடம்கேட்டு ஞான திரர்களாப் விளங்கி வந்தனர். இவர் சிறிது மந்த மதியி னராதலால் நூல்களின் பொருள் நயங்களே துணித்து உணர முடியாமல் ஆசிரியருடைய பணிவிடைகளேயே செய்து வந்தார். சீரிய பெரியோர்களேச் சார்ந்தும் தனக்குக்கூரிய அறிவில்லேயே என்று உள்ளம் உளேங்து