பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2470 திருக்குறட் குமரேச வெண்பா உள்ளம் புன்மையாய்த் தீமையுறின் அந்த மனிதன் எவ்வழியும் இழிந்து கழிந்து ஒழிந்தே போகின்ருன். புலையான போக்கை அறிந்துகொள்ள முடியாமையால் மனநலத்தை யிழந்து மனிதன் வழிவழியே பழிதுயரங் களில் அழுந்திப் பாழா யுழல் கின்ருன். மன் உயிர் என்றது இங்கே மனித இனத்தின் மேல் நின்றது. மனகலத்தின் பலனே மருவி மகிழ்வது இந்த இனமே ஆதலால் அந்த உரிமையும் உறவும் பெருமை யும் தகவா உணர வந்தன. மன்பதைக்கு என்ருே, அல்லது மாந்தருக்கு என்ருே கூறியிருக்கலாம்; அவ்வாறு கூறவில்லே: மன்னுயிர்க்கு, என்றே குறித்திருக்கிருர், ஏன் இவ்வாறு குறித்தார்? மனநலம் உயிர் புக்குழி எல்லாம் புகுந்து எவ்வழியும் திவ்விய ஒளிகளே யுதவி உய்தி தருவது கருதி. மனங்லம் உயிர்க்கு ஆக்கம் என்ற தல்ை அதனே அடையாதவர் வேறு எவற்றை அடைந்திருந்தாலும் அவர் ஆக்கங் கெட்ட மூதேவிகளே என்பதை இஃது ஊ க் க ம ா ய் உணர்த்தி கின்றது. உடலுக்கு உரிய ஆக்கம் ஊனமாய்த் தேய்ந்து எவ்வழியும் கழிந்து ஈனமாய் மாய்ந்து போம். உயிர்க்கு உரிய ஆக்கம் வான ஒளியாய் வளர்ந்து என்றும் கிளர்ந்து இன்ப நலனே அருளி வரும். ஆக்கம் அறத்தான் வரும்; அந்த அறம் மனத்துக் கண் மாசு இன்மையாலாம். மாசுபடியாமல் தேசு படிந்து வரின் அந்த மனம் ஈசனுக்கு இனிய இடமாய் அதிசய மேன்மைகளே அடைந்து விளங்கும். மனநலம் மனிதனுக்கு உயர்நலங்களே அருளுகிறது. மனம்போல வாழ்வு என்பது பழமொழி. செல்வ வாழ்வும் சீரிய புகழும் நல்ல மனம் நல்கி வரும் என்ற தல்ை அதன் மாட்சியும் ஆட்சியும் காட்சி யாய்க் காண வந்தன. மனம் நலமாய் வாய்த்தபோது அந்த மனிதன் நல்லவனாய் உயர்ந்து திகழ்கிருன். அது