பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2474 திருக்குறட் குமரேச வெண்பா என்பதை எல்லாரும் நேரே அறிந்து நெஞ்சம் தெளிய இவன் சிரோடு நன்கு உணர்த்தி கின்ருன். * சரிதம்-2. கீர்த்திகேது என்பவன் மகத தேசத்து வேங்தன். மாகதம் என்னும் நகரிலிருந்து அரசு புரிந்து வங்தான். சிறந்த நீதிமான். நிறைந்த கல்விமான். இறைவன்பால் பேரன்புடையவன். நல்ல நீர்மைகள் பல இவனிடம் சீர்மையா யமைந்திருந்தன. உள்ளப் பண்பு உடைய இவன் நல்ல பெரியோர்களேயே தனக்கு உறுதுணேயாக் கொண்டு முறை புரிந்து வந்தமையால் இவனுடைய ஆட்சி யாண்டும் மாட்சியாய் நீட்சியடைந்து வந்தது. காசிப முனிவரைச் சார்ந்து அரிய தத்துவப் பொருள் களே உய்த்துணர்ந்து தெளிந்தான். மனநலத்தாலும் இனநலத்தாலும் அதிசய மேன்மைகளே அடைந்து வந்த மையால் உலகம் துதிசெய்து வர இவன் ஒளிமிகுந்து கின்ருன். இருமையும் பெருமையாய் இன்பமுற இவன் இசை மிகுந்து வாழ்ந்தான். மனநலம் ஆக்கம் தரும்: இனநலம் எல்லாப் புகழும் இனிது நல்கும் என்பதை உலகம் தெளிய இவன் உணர்த்தி கின்றன். இவனு டைய சீவிய சரித்திரத்தைச் சிவரகசியம் என்னும் இதி: காசம் மிகவும் சுவையாய் விளக்கியுள்ளது. மனமும் இனமும் மகிமை மருவின் எனைவகையும் இன்பம் வரும் தக்க இனத்தைத் தழுவி வாழ். 458. தேசார் உடையவரும் தேடி இனநலத்தைக் கூசாதேன் கொண்டார் குமரேசா-மாசில் மனநலம் நன்குடைய ராயினும் சான்ருேர்க் கினநலம் ஏமாப் புடைத்து. (அ) இ-ள் குமரேசா! நல்ல மனம் உடைய உடையவரும் ஏன் இனநலத்தை நாடிக் கொண்டார்? எனின், மனநலம்