பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2476 திருக்குறட் குமரேச வெண்பா நல்ல நீர்மையாளரோடு சேரின் எவ்வழியும் நன்மை யாம்; அத்தகைய இனமே எத்தகையோர்க்கும் வித்தக கிலேயமாய் விழுமிய இன்பம் சுரங்து வரும். உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரப் புணருமாம் இன்பம்-புனரின் தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய். (நாலடியார் 247) அறிவுள்ள கல்லோரைச் சேரின் இன்பம்: அல்லாத புல்லரைச் சாரின் துன்பம் என இஃது உரைத்துள்ளது. நல்ல இனத்தையே கல்லோர் நாடிக் கொள்ளுவர். இவ்வுண்மை உடையவர்.பால் உணர வந்தது. ச ரி த ம் . இவர் மறையவர் மரபினர். திருப்பெரும்புதுார் என்னும் நகரில் பிறந்தவர். தாயார் பெயர் பூமிகங்கை. தங்தை பெயர் கேசவப்பெருமாள். இளமைப் பருவத்தி லேயே திருமால் பால் இவர் பெருமால் கொண்டிருக் தார். துண்ணறிவும் தண்ணளியும் இவரிடம் இயல் பாகவே கண்ணியிருந்தன. வேதம் முதலிய கலைகளே நன்கு ஒதி யுணர்ந்து உள்ளம் தெளிந்து உயர் ஞான சீலராய் இவர் ஒளிமிகுந்து நின்ருர், உலக பந்தங்கள் ஒழிந்து பரமனேயே கருதி யுருகும் பாகவதர்களே ஆவ லோடு தழுவி இவர் ஆதரித்து வந்தார். திருமலைநம்பி, திருக்கோட்டியூர் கம்பி, திருக்கச்சி கம்பி, மாறனேறி கம்பி, திருமோகூர் ஆழ்வார், பெரிய கம்பி முதலிய பெரியோர்களேப்பேணி அரிய தத்துவங்களே ஆராய்ந்து தெளிந்தார். நாராயணனே பரம்பொருள்: அப்பெரு மானே எண்ணி வழிபடுவதே புண்ணியம்: அதுவே பிறவிப் பேரும் என யாவருக்கும் இவர் போதித்து வக் தார். அதல்ை வைண மதத்துக்கு இவர் பரமகுருவாய் விளங்கினர். எம்பெருமாளுர், இளையாழ்வார், இராமா நுசர் என எல்லாரும் இவரை உரிமையோடு போற்றி வந்தார். திருவரங்கத்தமுதனர் என்னும் பெரியார் இவர் மீது பேரன்பு பூண்டு ஒரு பிரபந்தம் பாடியுள்ளார். இராமானுச நூற்றந்தாதி என அது விளங்கி வருகிறது.