பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தேழாவது அதிகாரம் தெரிந்து செயல் வகை. அ.தாவது செய்ய வுரிய காரியங்களே அ ர ச ன் கூர்ந்து ஒர்ந்து தேர்ந்து செய்யும் திறம். சிற்றினம் சேராமல் பேரினத்தைச் சேர்ந்து சீரும் சிறப்பும் செறிக் துள்ள வேந்தன் கருமங்களேக் கருதிப் புரியும் மருமங் களே அரச தருமங்களா இதில் உணர்த்துகின்ருர். அதிகார முறைமையும் உரிமையாய் மருவி கின்றது. 461. உற்ற வரவுடனே ஊதியமும் சூழ்ந்துபிட்டங் கொற்றனேன் செய்தான் குமரேசா-முற்ரு அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். (க) இ-ள். குமரேசா! செலவு வரவுகளின் நிலைமைகளே ஆய்ந்து பிட்டங்கொற்றன் ஏன் வினைகளைச் செய்தான்? எனின், அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் என்க. கருமம் புரியும் தருமம் காண வந்தது. செல்லும் செலவையும் சேரும் நிலையையும் சேர்ந்து பின் வருகிற வரவையும் கூர்ந்து ஆராய்ந்து தேர்ந்து வினே செய்க. அழிவது என்றது செலவாகும் பொருளின் அளவினே. ஆவது என்றது அதல்ை ஆகி வருகிற விளேவினே. அளபெடைகள் இனிய ஓசைகளே இசைத்துகின்றன. எண் உம்மைகள் மூன்றும் தனித்தனியே ஒவ்வொன் றையும் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்ள வங்தன. அழிவதைச் சீர்துரக்கி, ஆவதை நேர் நோக்கி, ஊதி யத்தை யூகித்து ஒர்ந்து தேர்ந்துகொள்ள வேண்டும். இங்கே குறித்துள்ள குறிப்புகளால் பொருள் ஈட்டத்