பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.94 திருக்குறட் குமரேச வெண்பா இவன் வாழ்ந்து வந்துள்ளான். வழிபயக்கும் ஊதியம் சூழ்ந்து தொழில் செய்யும் வழியை இவன் எழிலோடு இனிது காட்டியுள்ளமையால் தெரிந்து செயல்வகைக்கு சிறந்த உயர் சான்ருய் இவன் விளங்கி நின்ருன். வரவு பெருகி வரும்வழியை காடிக் கருமம் புரிக கவிந்து. விளைவுன்னி வினேசெய். 462. சார்ந்தெண்ணிச் செய்த தசரதனும் ஆசுவனும் கூர்ந்தார்சீர் என்னே குமரேசா-ஒர்ந்து தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்னிச் செய்வார்க் கரும்பொருள் யாதொன்றும் இல். (உ) இ-ள் குமரேசா! அறிஞரோடு ஆய்ந்து செய்த தசரதனும் குவலயாசுவனும் காரிய சித்தியால் ஏன் புகழ் பெற் ருர்? எனின், தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு அரும் பொருள் யாதொன்றும் இல் என்க. உரியவருடன் ஒர்ந்து வினைசெய் என்கிறது. கருமங்களே நன்கு தெளிந்தவர்களோடு க ல ங் து ஆய்ந்து செய்யும் அறிஞர்க்கு அரிய பொருள் யாதும் இல்லை. எல்லாம் எளிதே முடியும்"என்பதாம். தெரிந்த இனம் என்றது கருமத்துறைகளேயும் தரும நெறிகளேயும் நன்கு .ெ த எரி ங் து தேர்ந்துள்ள அறிஞர்களே. தனக்கு உறுதித் துனேயாக அரசன் தெரிந்து செறிந்து கொண்ட மந்திரிகளும் புலவர்களும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களே. ஒருவன் எவ்வளவு சிறந்த அறிவுடையயிைனும் கருமங்களின் மருமங்களான எல்லா வகைகளையும் அவன் தெளிவாய்த் தெரிந்திருக்க முடியாது. எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இல்லை எனும் இவ்வுலகம். (தாயுமானவர்)