பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47. தெரிந்து செயல் வகை 2495. அறிவின் அதிசய நிலையை இதல்ை அறிந்துகொள் கின்ருேம். பழகிய அளவே அது தெளிவுறுகின்றது. அறிவு பலவகை நிலைகளில் பரந்து விரிந்துள்ளது. கல்வி யறிவு, கணக்கறிவு, சிற்ப அறிவு, சிலேயறிவு, இசையறிவு, ஏரறிவு, தொழிலறிவு, வணிக அறிவு. தாவரவறிவு, நிலவறிவு, நீரறிவு, பாரறிவு, போரறிவு, தத்துவ அறிவு என இன்னவாறு அறிவுலகம் உன்னி உணருமாறுஎவ்வழியும்பெருகிகன்னயமாமன்னியுளது. அந்த அந்தத்துறையில் பழகிப் பயின்று தெளிந்த வர்களிடமே அந்த அந்தக் கருமங்களே அறிந்துகொள்ள வேண்டும். கருமங்களின் மருமங்கள் அவரவரது கருத்து அளவே விருத்தியாய்த் தெரிய வருகின்றன. தெரிந்த இனம் என்று இங்கே பன்மையில் குறித் தது, ஒருவருக்குத் தெரிந்தது மற்றவருக்கு வேறு வகை யில் தெரியலாம் ஆதலால் பலரையும் ஒருங்கு சேர்த்து மருங்குவைத்து மன்னன் ஆராய்ந்துகொள்ள வேண்டும். ஒன்றுநன் றெனவுணர்வு ஒருவன் கொள்ளுமேல், அன்றதென்று ஒருவனுக்கு அறிவு தோன்றுமால்; நின்றதொன் றுண்டுகேள் நீதி நூலிைேடு ஒன்றிநின் றவரொடும் உணர்க ஒட்டியே. (சூளாமணி) நீதி நெறியோடு க்ருமங்களே ஆய்ந்துள்ள பலரை யும் ஒட்டி நின்று உறுதி நலன்களே ஒர்ந்து கொள்க என வேங்துமுறையை இது விளக்கி யுளது. தெரிந்த இனத் தோடு சேர்ந்து எண்ணித் தேர்ந்து செய்ய வேண்டும் என்பதை இதில் தெரிந்து கொள்ளுகிருேம். நாட்டு மக்களுக்கு நலம்புரிந்து வருகிற அரசாட்சி முறைகள் வினேமாட்சிகளால் விளங்கி வருகின்றன. தெளிவான வினையாளர்களே உரிமையோடு தழுவிவரும் அளவு அந்த அரசு எந்த வகையிலும் பெருமையாய் ஒளிபெற்று மிளிர்கிறது. ஜயமே திரிவே என்னும் அவையற அறநூல் நீதி வையமால் யானேபாய்மா வன்படைத் தொழில்நூலாதி.