பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ff f 55. .ெ சங்கோ ன் ைம அரசநீதி எங் த நாட்டிலும் இந்த வகையில் நீண்டு வந்துள்ளதை இதல்ை ஈண்டு அறிந்து கொள்ளலாம். பயிர்களுக்கு இடர் விளேக்கும் கடிய பூண்டுகள் போல் உயிர்களுக்குத் துயர் இழைக்கும் கொடிய தியர் களே அடியோடு அழித்து ஒழிக்கவேண்டும். பாதுகாப்பு முறையில் தீது தீர்த்தருளுவதே திறல்வேங் தன் கடமை யாய்ச் சிறந்துள்ளது. நல்லவரை நாடிக் காத் து ப் பொல்லாதவரைப் பொன்ற ஒழிப்பவன் வென்றி வேந்தனய் விளங்கி வரு கிருன். அவன் கீர்த்தி உலகெங்கும் ஓங்கி உலாவுகிறது. இந்த வுண்மையை இராமன் விளக்கி கின்ருன். ச ரி த ம். அரசு முடி துறந்து கானகம் போன பின்னரும் இராமன் அங்கே செங்கோல் நீதி செலுத்தி வந்தான். நல்லவர்களுக்கு அல்லல் நேராதபடி நாடிக் காத்தான். புனித முனிவர்களுக்கு இடையூறுகள் செய்து வங்த கொடியவர்களே ஒறுத்து அடக்கின்ை. மாதவர்களுக்கு ஆதரவு செய்ய வாய்த் தமையால் வனம் புகுந்தது தனது வாழ்க்கையில் சிறந்த ஒர் உயர்ந்த பகுதி என்று: உள்ளம் உவந்து கொண்டான். அந்த உவகை வழியே பொங்கி வந்த மொழிகள் வீர ஒளிகளாய் வினங்கி வேங்தின் நிலையை விளக்கி கின்றன. வேந்தன் வீயவும் யாய்வரம் மேவவும் ஏந்தல் எம்பி வருந்தவும் என்நகர் மாந்தர் வன்துயர் கூரவும் யான்வனம் போந்தது என்னுடைப் புண்ணியத்தால் என்ருன். அறந்தவாநெறி அந்தணர் தன்மையை மறந்த புல்லர் வலிதொலே யேன் எனின் இறந்து போகினும் நன்றிது வல்லது பிறந்து யான் பெறும் பேறென்ப தியாவதோ? (2) (இராமா, 3:3}