பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங் கோன் ைம 29.17 நிலை கெட்டவன் நிலைமையைக் கூற நேர்ந்தபோது கொலைஞரும் கூட நேர்ந்தார். உவமான உபமேயங் களில் தினேயும் பாலும் இணேயாமல் வந்தன. கொலேரின் வேந்து கொடிது. -- இதில் பால் மயங்கி யுள்ள பான்மை காண்க. முதலும் சினேயுமென் ருயிரு பொருட்கும் -- துதலிய மரபின் உரியவை உரிய. (தொல்காப்பியம்) உருவக உவமையில் தினேசினே முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணினர் கொள லே. (நன்னூல்) மிகுதலும் குறைதலும் தாழ்தலும் உயர்தலும் பால்மாறு படுதலும் பாகுபா டுடைய. (தண்டியலங்காரம்) இந்த இயல் விதிகள் ஈண்டு எண்ணி உணச வரியன. இலக்கணக் குறிப்புகள் துலக்கம் உடையன. நாட்டைப் பாதுகாக்க வந்த வேங்தன் கல்லவன் ஆனல் அங்கே மாந்தரும் நல்லவராய் மகிழ்ந்து வாழ்ந்து வருவர்; அவன் தீயவயிைன் யாவரும் தியராகப் யாண்டும் நோய் உழந்து நொந்து வருந்துவர். வேந்தன் உலகை மிக நன்று காப்பது வாய்ந்த மனிதர்கள் அவ்வழி யா நிற்பர்; பேர்ந்திவ் வுலகைப் பிறர் கொள்ளத் தாம்கொள்ளப் பாய்ந்த புலியன்ன பாவகத் தானே. (திருமந்திரம் 245} உலகை இனிது பேணி வரும் அளவே வேங்தன்: பேணுமல் பிழை புரிய நேரின் அவன் கொலே புரிகின்ற பு:ஆலயான ஒரு கொடிய காட்டு மிருகமே எனத் திருமூலர் இவ்வாறு எள்ளி இகழ்ந்து காட்டியிருக்கிருர், உரிய நீர்மையை இழந்த போது சீர்மை யாவும் இழந்து அரசன் தீயவன யிழிந்து கழிந்து ஒழிகின்ருன். கொடுங்கோலன் கடுங்கொலைஞன் ஆகின்ருன். இவ்வுண்மை மகிடன் பால் காண வந்தது.