பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2940 திருக்குறட் குமரேச வெண்பா இவற்றுள் மன்னுதல் குறித்து கிற்றல் அறிக. மன்ன உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே, துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈயா மையின் 5 தொன்மை மாக்களின் தொடர்பு அறியலசே; தாள்.தாழ் படுமணி இரட்டும் பூதுதல் ஆடியல் யானே பாடுநர்க்கு அருகாக் கேடில் நல்லிசை வயமான் தோன்றலேப் பாடி நின்றனென் ஆகக் கொன்னே 10 பாடுபெறு பரிசிலன் வாடின ன் பெயர்தல்என் நாடு இழந் ததனினும் நனியின் ெைதன வாள் தந் தனனே தலே எனக்கு ஈயத் தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின் ஆடுமலி உவகையொடு வருவல் 15 ஓடாப் பூட்கை நின் கிழமையோ ற் கண்டே. (புறம், 165) ஒன்றும் நிலையாத இந்த உலகில் என்றும் கிலேத்து நிற்பது புகழே: ஈகை யுடையவரே புகழ் ஒளியால் யாண்டும் விளங்கி கிற்கின்றனர். ஈயாத உலோபிகள் இருந்த இடமும் தடம் தெரியாமல் வீணே மாய்ந்து ஒழி கின்றனர்: கையில் யாதொரு பொருளும் இல்லாதிருக் தும் தன் தலையைக் கொடுக்க நேர்ந்தமையால் குமண வள்ளலின் புகழ் உலகம் எங்கும் பரவி ஒளி புரிந்து வருகிறது எனப் பெருந்தலைச் சாத்தனர் என்னும் சங்கப் புலவர் அந்த மன்னனை இன்னவாறு வியந்து கன்னய மாப் புகழ்ந்து போற்றி யிருக்கின்ருர் . மன்னுதல் மன்னமை இரண்டும் இதில் மன்னி வந்துள்ளன. உண்மை நிலைகளே உன்னி உணர்ந்து பொருள் நயங்களே ஒர்ந்து தேர்ந்து கொள்ளுக. ~ * செங்கோலே அரசர்க்குச் சிறந்த புகழை அருளும்: அது கோடுமாயின் அவர்க்குக் கொடிய நெடிய பழியே. இவ்வுண்மை செழியன் பால் தெளிய கின்றது.