பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.946 திருக்குறட் குமரேச வெண்பா காதலன் அளி புரிந்துவரின் காதலி ஒளி மிகுங்து வருவள்: அவன் அளிமாறின் இவள் எழில் மாறி இன்ன லுறு வள் என ஒரு தோழி இன்வாறு கூறி புள்ளான். பெருங்கடுங்கோ என்னும் சங்கப் புலவர் இங்கனம் பாடியிருக்கிரு.ர். குறளின் சொல்லும் பொருளும் இதில் உறழ்ந்து வந்துள்ளன. குறிப்புகளேக் கூர்ந்து ஒர்க்து பொருளேத் தேர்ந்து கொள்ள வேண்டும். வள்ளுறு வயிரவாள் அரசில் வையகம் நள்ளுறு கதிரி லாப் பகலும், நாளொடும் தெள்ளுறு மதியிலா இரவும், தேர்தரின் உள்ளுறை உயிர் இலா உடலும் ஒக்குமே. (இராமா: 2, 10-7) கதிர் இல்லாத பகல், மதி இல்லாத இரவு, உயிர் இல்லாத உடல்போல் கல்ல அரசு இல்லாத நாடு அல்ல லடையும் என இ.து உணர்த்தியுளது. இதன் பொருனே ஊன்றி உணர்ந்து கொள்பவர் அரசின் மகிமை மாண்புகளே தத் தேர்ந்து தெளிந்து கொள்வர். மன்னுயிர்க்கு இன்னுயிராய் மருவியுள்ள மன்னன் தண்ணளி தழு விவரின் புண்ணியமூர்த்தி என யாவரும் எண்ணிப் போற்றுவர். அவன் அருள் இலனேல் இருண் படிந்த உலகமாய் யாவரும் இன்னலுறுவர். மழைபொழியா தாயின் மகிதலம்பாழ்; மன்னன் உழையருள் இன்றேல் உயிர்பாழ்;-பிழையிலா நீதி யிலேயேல் நிலைமைபாழ்; பாழேநூல் ஒதல் இலேயேல் உடல். - அருளும் நீதியும் கல்வியும் ஆட்சிக்கு மாட்சி புரிகின் றன; அவை இல்லையேல் அரசன் உயிரும் உயர்வும். பிறப்பும் இழந்தவய்ை இழிந்துபடுகிருன் என்பதை இதில் தெளிந்து கொள்கிருேம். குடிகளுக்கு இதம் புரிந்து வரும் அளவே முடிமன்னர் உயர்ந்து வருகின்ற னர். இதம் ஒழியின் அவர் அதமாய் அழிகின்ருர். Justice is the bread of the nation; it is always hungry - for it. (Chateau briand) !, - - - - - - - .