பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼952 திருக்குறட் குமரேச வெண்பா மழை மாறியது? எனின், மன்னவன் முறைகோடிச் செய்யின் வானம் உறைகோடி பெயல் ஒல்லாது என்க. மழை பெய்யாத பிழை தெரிய வந்தது. அரசன் நீதி மாறித் தீது புரியின் அங்கே மேகம் மாறி மழை பொழியாது ஒழியும் என்க. முறை= நீதி: ஒழுங்கு. - செங்கோலின் இயல்பான செயல் முறை புரிதலே ஆதலால் அது கோடியது கொடுங்கோலாய் டிேயது. அறநெறி வழாமல் முறை புரிந்து வரும் அளவுதான் அரசன் திறனும் தேசும் உடையய்ைச் சிறந்து வரு கிரு:ன். நீதி வழுவினால் அங்கே தீது விளேந்து விடும். தன் கடமையை முற்றும் ஒர்ந்து இறைவன் செய் வது முறை என வந்தது. முறைமை குன்ருமல் வரும் அளவே இறைமை என்றும் கிலேத்து வருகிறது. இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனே முறைகாக்கும் முட்டாச் செயின். (குறள், 547) உலகத்தைக் காத்து வருகிற அரசனேக் க த் து வருவது எது? அவனது நீதி முறையே. இதல்ை முறை யின் அருமை பெருமைகள் அறியலாம். இத்தகைய முறை குறையுற நேரின் அஃது எத்தகைய கேடாம்! எத்துனேத் திதாம்: உய்த்து உணர வேண்டும். முறைகோடிய நாட்டில் மழை சரியாகப் பெய்யாது. என் பார் உறைகோடும் என்ருர், கோடுதல் = உரிய காலத்தில் மழை செவ்வையாகப் பெய்யாமல் மாறுதல். உறை= மழை. பயிர் முதலிய உயிரினங்கள் இவ் வுலகில் உறைந்து வாழுதற்கு உரிமையாய் உறுதி புரிந்து வருவது ஆதலால் மழைக்கு உறை என்று ஒரு பெயர் முறையே வந்தது. உறை கால் மாறிய ஓங்குயர் நனந்தலே. ੇ (பெரும்பாண், 291) - உறைவிழ் ஆலி. (ஐங்குறுநூறு 213)