பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2958 திருக்குறட் குமரேச வெண்பா காவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி நாவலோஒ என்றழைக்கும் நாளோதை-காவலன்தன் கொல்யானே மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே நல்யானே க் கோக்கிள்ளி நாடு. (முத்தொள்ளாயிரம்) காவல் உழவர், காவலன் என அரசரை இது குறித் துளது. குறிப்புப் பெயர் சிறப்பு மிக வுடையது. காவலனே ஆக வழிபட்டார் மற்றவன் ஏவல் வினைசெய் திருந்தார்க் குதவடுத்தல் ஆவணய நின்றதன் கன்று முலையிருப்பத் தாயணல் தான்சு வைத் தற்று. (பழமொழி, 20) அரசனே நண்பன் ஆகப் பெற்றவர் அவனது ஏவ: லாளரிடம் உதவிபெற விரும்புதல், பசுவின் கன்று தன் தாயின் மடியில் பாலேக் குடியாமல் அலைதாடியைச் சுவைக்க நேர்ந்தது போலாம் என இது உரைத்துளது. ஆ பயன் = பசுக்கள் தருகிற பால் குன்றும் = குறைந்து போம். எவ்வளவோ நல்ல பிராணிகள் உலகில் உள்ளன; இருந்தும் அவற்றை எல்லாம் விடுத்து ஆவை மாத்திரம் ஈண்டு விதந்து எடுத்து முதன்மையாக் குறித்தது ஏன்? அதன் கிலேமை தலைமைகளேக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள. உலக உயிர்களுக்கு இனிய பயன் சுரங்து வருவது தனியே வியந்து காண வந்தது. பசுவின் பால் உயிர்ச் சத்து உடையது; பருக இனியது: அமுதம் அனேயது. ஆவின் பயன் ஆவிக்கு உரிய நல்ல பயன். . நிலம் வளமாய்ப் புல் முதலியன .ெ ச. பூழி த் து த், தழைத்துவரின் அவற்றை உண்டு பசுக்கள் மிக்க பாலைத் தரும். மக்கள் நுகர்ந்து மகிழ்ந்து வருவர். அரசன் நெறியே முறை புரியாது ஒழியின் அங்கே பருவ மழை சரியாய்ப் பெய்யாது: பெயல் மாறில்ை: கிலம் இயல் மாறும்; வயிறு ஆர மேய்ந்து வருதற்கு, உரிய பசிய புல்லுகள் இல்லையேல் பசுக்கள் மெலிந்து போம்: பால் வறந்து விடும். பார் பரிந்து வருந்தும்.