பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2960 திருக்குறட் குமரேச வெண்பா ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான் மறை முற்றி ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஒம்பும் அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுத்த. (சிலப்பதிகாரம், 23) அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும். (தொல்காப்பியம்) அறுதொழில் அந்தனர் அறம் புரிந்து எடுத்த. (புறம் 397) ஒதல் அந்தணர் வேதம் பாட. (மதுரைக்காஞ்சி 656) ஒதல் ஒதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் என்றி வை ஆறும் ஆதிக் காலத்து அந்தனர் தொழிலே. (பிங்கலந்தை) ஒதலே ஒதுவித்தல் உடன் வேட்டல் வேட்பித்திட்டல் ஈதலே ஏற்றல் ஆறும் ஏற்கும் அந்தனர் தொழிற்பேர். (நிகண்டு) திருவருள் பெற்ற இருபிறப் பாளன் முத்தீ வேள்வி நான்மறை வளர --- ஐவேள் வயர்த்த அறுதொழி லாளன். (நம்பி-மும்மணி) செம்மை வெண் ணிற்று ஒருமையினர்; இரண்டு பிறப்பின் சிறப்பினர்; மும்மைத் தழல் ஒம்பிய நெறியார்; நான்கு வேதம் முறை பயின்ருர்; தம்மை ஐந்து புலனும்பின் செல்லும் தகையார்; அறுதொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் ஏழுலகும் HT போற்றும் மறையோர் விளங்குவது. (பெரிய புராணம் 26-2} உன்னல் அரன்கழலே ஓங்கியசீர் அங்கிஅயன் என்னஉவ மித்தல் இவரென்றே-நன்மறைகள் ஒதலே ஒதுவித்தல் வேட்டலே வேட்பித்தல் ஈதல் இரத்தலென் றேத்து. (வெண்பாப் பாட்டியல்):