பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 .ெ கா டு ங் கோ ன் ைம 2961 அறு தொழிலோரைக் குறித்து வந்துள்ள இவை சண்டு அறிய வுரியன. ஒன்று புரிவோர்; இரு பிறப் பாளர்: முத்திச் செல்வர்; த ர ன் ம ைற பயில்வோர்; ஐவகை வேள்வியர்; அறுதொழிலாளர் என இவ்வண் ணம் எண்ணலங்காரமாக இவரை எண்ணி வருவது கவிகளின் மாபாய் கண்ணி வந்துள்ளது. அறுதொழிலோர் நூல் என்றது வேதத்தை. வேதம் என்பது அறிவைப் போதிப்பது; தருமங் களைத் தெரிவிப்பது; உயிர் துயர்நீங்கிப் பரமனே அடை பும் மருமத்தை உறுதியாக உணர்த்துவது. * இதனே ஓதி வருபவர் வேதியர் என நேர்ந்தார். வேறு தொழில் புரியாது ஒழுக்கம் தழுவி வேதம் ஒதி வருகிற அவர்க்கு உண்டி உடை உறையுள் முதலி பன உதவி வருவது அரசன் கடமையாயது. அந்தனர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (குறள், 543) முன்னம் வந்துள்ள இது இங்கே சிந்திக்க வுரியது. வேதமும் தருமங்களும் காட்டில் விளங்கி வருவது செங்கோல் மன்னனது ஆட்சி முறையாலே யாம் என்ப தை இதல்ை இங்கே நன்கு அறிந்து கொள்கின்ருேம். இந்த திே நெறி வழுவித் திது புரிய நேரின் அது கொடுங் கோன்மையாம். கொடுங்கோலன் நல்லதை காடிச் செய்யான்; அல்லவையே யாண்டும் செய்ய நேர் வான். நேரவே வேதியர் அங்கே வேதம் ஒதார்: வேறு தொழில்கள் செய்யப் போவார்; போகவே .ே வ த ம் மறந்து போம். ஆதலால் அறுதொழிலோர் நூல் மறப்பர் என்ருர், பாலேயும் நூலையும் இவ்வாறு குறித்துக்காட்டி யதால் அவற்றின் பான்மை மேன்மைகளே உய்த்து உணர்ந்து உண்மைகளைத் தேர்ந்து கொள்கின்ருேம். பால் உடலுக்கு உரம் தரும். வேதம் உயிருக்கு உறுதி புரியும். 371