பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2962 திருக்குறட் குமரேச வெண்பா பாலேப் பசுக்கள் தருகின்றன; வேதத்தை வேதியச் ஒதி யருள்கின்றனர். உலக வுயிர்களுக்கு இதமான இங்த இருவகை இனமும் கொடுங்கோலன் காட்டில் குன்றி மறைந்துபோம். ". ஆவின் பாலும் அங்தனர் நூலும் கோவின் செங் கோலால் குலாவி வருகின்றன. கொடுங்கோலால்குன்றி மறைகின்றன. கடுங்கேடுகள் கின்று கிறைகின்றன. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும். (புறம், 9) ஆவுக்கு ஆயினும், அந்தணர்க்கு ஆயினும். (இராமாயணம்} வாழ்க அந்தனர்; வானவர் ஆன் இனம். ===-حتی (தேவாரம்) ஆவையும் அந்தணரையும் இவ்வாறு இனமாக் சேர்த்து எண்ணிப் போற்றியுள்ளனர். நீதியான பாது காப்பினுலேயே கல்ல நீர்மைகள் காட்டில் தழைத்து வரு கின்றன. அந்தக் காவல் இல்லையேல் பாவும் அவல மாய் எங்கும் இடர்களே தொடர்ந்து படர்ந்து வரும். அந்தனர் அருளேச் சாரார்; அரும்பயம் அருக்கும் சேதா; மந்திரம் மறப்பர் நூலோர்; ஆதலால் மகம் உண் டாகா; இந்திரன் முதலா உள்ள இமையவர் அவியூண் கொள்ளார்; கந்தரம் சிறிதும் நல்கா; காவலன் கொடுமை யாலே. (செவ்வந்திப் புராணம், 10) காவலன் இனிது காவாமல் கொடுமையாயிருங்தால், அந்தணர் அருள் உருர்: மந்திரம் மறப்பர் துால் ஒதார்: பசுக்கள் பால் குன்றும்; இந்திரன் முதலானேர் சிங்தை வருங்துவர்; மேகம் மழை பொழியாது என ஒரு முனிவன் துனி மிகுந்து இவ்வாறு கூறியுள்ளார். சேதா = பக: பயம் = பால். அருக்கும் = குறையும், கக்தரம்=மேகம். கம்=நீர். அதனைத் தரித்திருப்பது கக்தரம் என வங்தது. நீதிமுறையோடு பாதுகாத்து வரும் அளவே அங்த அரசன் நாட்டில் உயர்ந்தோர் உவங்து வாழுவர்; காப்பு கிலே பழுதாயின் அங்கே கல்லோர் கலம்ாப் வாழார். அல்லல்களே யாண்டும் நீண்டு கிற்கும்.