பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*3968 திருக்குறட் குமரேச வெண்பா தண்டித்து அடக்குவதும் வேந்தனுடைய கடமைகளாம். அவ்வாறு தண்டிக்குங்கால் அந்தத் தண்டனை தகுதி யோடு இதமாயும் இணைந்திருக்க வேண்டும்; கொடுமை மண்டி நிற்கலாகாது. தண்டிக்கப் பட்டவன் தனக்கு நேர்ந்த தண்டம் தக்கதே என்று எண்ணவும், மீண்டும் தகாத வழியில் செல்லாமல் உள்ளம் திருந்தி அவன் கல்லவனாய் உயரவும் அச்செயல் உதவி புரிய வேண்டும். ஆற்றிய தண்டத்தாலே அறிவு அவன் அடைந்தான் அன்றே என்றபடி ஒறுப்பு சிறப்புற வேண்டும். ஒறுத்தல்= வருத்துதல்: தண்டித்தல். பொறுப்பதற்கு நேரே மாறுபட்டது ஒறுப்பது. குற்றம் செய்தவனே ஒற்றி உருத்து வுருத்துவது ஒறுப்பது என உற்றது. அரசன் புரிகின்ற இந்த ஒறுப்பு ங்ாட்டில் குற்றங்கள் நீங்கிக் குணங்கள் ஓங்கிவரச் செய் வதால் இராச நீதியாய் இசை பெற்றுள்ளது. ஒறுத்தாரை ஒன்ருக வையா ரே வைப்பர் ப்ொறுத்தார்ைப் பொன் போல் பொதிந்து. (குறள், 155) இந்த நீதி பொதுமக்களே நோக்கி வந்தது. தனக் குத் துயர் இழைப்பவரை ஒருவன் பொறுத்தால் அவ னுக்குப் புகழும் புண்ணியமும் உளவாம். பிறர்க்கு இடராய்த் தன் நாட்டில் தீமை செய்ப வரை அரசன் உடனே தண்டித்து அடக்க வேண்டும். அவ்வாறு ஒறுக்காமல் பொறுக்க நேரின், தீமைகள் வளரும். நன்மைகள் தளரும்; மக்கள் மறுகி வருந்துவர்;. இறைமுறை புரியாப் பேதை என அரசை யாவரும் இகழ்ந்து பழிப்பர். அவ்வாறு பழிபடியாமல் ஒளி புரிக. களேகளைக் கடிந்து நீக்கி உழவன் பயிர்களே வளர்ப் பதுபோல் பிழைகளே ஒறுத்து ஒழித்து உயிர்களேக் காப்பவனே உத்தம வேந்தனய் ஒளிபெற்று வருகிருன். திமை திர்ந்து ஒ ழி ந் து நன்மை ஓங்கி நாடு நலமாய் வரவே நாடன் யாண்டும் நன்கு நாடி வருகின்ருன். நீமெய் கண்ட தீமை கானின் ஒப்ப நாடி அத்தகவு ஒறுத்தி. (புறம், 10)