பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57. .ெ வ ரு வங் த செ ய் யா ைம 2975 சிறுகண் யானை செவ்விதின் ஏவிப் பாசவற் படப்பை யாரெயில் பலதந்து 15 அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியியர் அத்தை நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே இறைஞ்சுக பெருமநின் சென்னி; சிறந்த 20 நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னர் நாடுகூடு கமழ்புகை எறித்த லானே செலியர் அத்தை நின் வெகுளி வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத்து எதிரே 25 ஆங்க, வென்றி எல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர் ஒண் கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே. (புறம், )ே வழுதி வழியை ஒளி செய்து வந்துள்ள அரசர் பெரும! இமயம் முதல் குமரிவரை உன் ஆணே செல்லு: கின்றது; சமன் செய்து சீர்துக்கும் கோல் போல் உன் செங்கோல் எங்கும் நீதி புரிகின்றது; இருளே நீக்கி உலகுக்கு ஒளிசெய்து வருகிற சூரியன்போலவும் சக்தி ரன் போலவும் உயிர்கள் துயர் உருமல் பாதுகாத்தருளு கிற பெரும! நீ என்றும் தலைமையுடன் கி ல மி ைச நிலைத்து வாழுக! என இவ் வேங்தர் பெருமானேப் புல வர் பெருமான் இவ்வாறு வாழ்த்தியிருக்கிருச். கவியில் உள்ள பொருள் நயங்களேக் கருதி யுணர்க்து கொள்ள வேண்டும். நெறி நியமங்களுடன் ஒழுகி எவ்வழியும் செவ்வியய்ைக் குடிகளே இக் குரிசில் பாதுகாத்து வக் தான். தவறு எவர் செய்யினும் அவரைத் தண்டித்து: அடக்கினன். இந்த மன்னனது தண்டனேயுள் அறிவும் ஆதரவும் மருவி யிருந்தமையால் தரும மூர்த்தி என்று: யாவரும் இக் கோமகனேப் போற்றி வந்தனர். கடிது, ஒச்சி மெல்ல எறிபவன் நெடிது ஆக்கம் உடையளுகப் நிலைத்து வாழ்வன் என்பதை உலகம் இக் குல வேங்தன் பால் நிலமாக உணர்ந்து தெளிந்து மகிழ்ங்து வங்தது.