பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28, 16 திருக்குறட் குமரேச வெண்பா மேன்மையான விழுமிய பான்மைகளே இவற்ருல் தெளிவா இங்கே தெரிந்து கொள்கின்ருேம். புகவும் போக்கும் பொச்சாப்பு இன்றிப் பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி. (பெருங்கதை 1-37) வெற்றித்திறம் கானும் வேந்தர் பொச்சாப்பு இன்றி யாண்டும் உச்சாகமாய் உறுதி பூண்டு விழிப்போடு இருப்பர் என இது விளக்கி யுளது. உள்ளக் களிப்பால் மருண்டு மயங்கி மறவி யுறுப. வர் எள்ளலடைந்து வருந்துவர். இவ் வுண்மையை இரவியும் இந்திரனும் நன்கு விளக்கி கின்றனர். ச ரி த ம். இறைவன் கலையாய் நின்று உலகம் முழுவதையும் விளக்கி விளங்கும் சோதி யுருவினன் சூரியன் எனப் பேர் பெற்றுள்ளான். பரிதி இரவி பானு பகலோன் மேலோன் எனப் பல காரணப் பெயர்களுடையவன். கால தத்துவத்துக்கு இவன் அதி தேவதை. எல்லா உயிரினங்களும் இனிது வாழ்ந்துவர இவன் ஒளி வீசி உலாவி நிற்கிருன். இவனது உதயம் உலக வுயிர் களுக்கு உவகை புரிந்து வருதலால் கவிகள் அதனே வியந்து மகிழ்ந்து புகழ்ந்து வந்துள்ளனர். உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு. (முருகு) நக்கீரர் இவ்வாறு சூரியனேத் துதித்திருக்கிரு.ர். எண் னரிய மறையிைெடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த - விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கர ம்குவிப்ப வேலே என்னும் மண்ணுமணி முழவதிர வான் அரங்கின் நட ம்புரிவாள் இரவி யான கண்ணுதல்வா ன வன்கனகச் சடைவிரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம். (இராமா : 1-10-153),