பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3000 திருக்குறட் குமரேச வெண்பா இனத்தோடு ஆராய்ந்து எண்ணுமல் இருந்தவன் அதனால் விளேங்த இடையூறுகளே க்கண்டு மனக்கலக்கம் மண்டி வெகுண்டு சீறி வெய்ய துயர்களேச் செய்ய நேர்வன். காரியக் கேடுகள் சீரிய செல்வங்களேச் சிதைக் கும் ஆதலால் திரு சிறுகும் என்ருர். சினமும் சிற்றமும் மண்டி வெருவந்த செயல்களேச் செய்ய நேர்ந்தவன் வெய்யனாய்த் திருவிழந்து அழிவன். இது சததன் வாவின் பால் அறிய வந்தது. ச ரி த ம் . இவன் யதுகுல வேந்தன். இருதிகன் என்னும் மன்னன் புதல்வன். தாய் பெயர் சவுமதி. வடமதுரை யின் வடபாலிருந்த பெரிய நிலப் பகுதிக்கு உரியவயைப் இவன் அரசு புரிந்து வந்தான். மிக்க திருவுற்றிருந்தும் தக்க அறிவற்றவய்ைத் தருக்கி நின்ருன். எதையும் ஆராய்ந்து பாராமல் யாண்டும் துடுக்காய் மூண்டுவந்த இவனிடம் பொருளாசையும் பொருமையும் நீண்டு நின் திறன. இவன் காலத்தில் உயர்நிலையில் ஒளிபெற்றிருந்த, வன் சத்திராசித்து என்னும் மன்னன். சிறந்த மதிமான்: நல்ல உத்தமன். அவனிடம் உயர்ந்த மணிமாலே ஒன்று இருந்தது. அது மிகவும் அதிசயமான மகிமை வாய்ங். தது; அதனேக் கவர்ந்து கொள்ள இவன் விழைந்தான். பலவகையிலும் படு சூழ்ச்சிகள் செய்து முடிவில் அவனேக் கொன்று அதனேக் கைகொள்ளத் துணிந்தான். மாறுவேடம் பூண்டான்; கூரிய வாளுடன் யாரும் அறி யாதபடி அவனது அரண்மனேயுள் புகுந்தான். அமளி யில் அயர்ந்து உறங்கிக் கிடந்த அவனே வெட்டி வீழ்த் தின்ை: மணியைக் கவர்ந்து கொண்டு விரைந்து வெளி ஏறித் தன் நகரை அடைந்தான். அந்த அரசனுடைய அருமைத் திருமகளான சத்தியபாமை தங்தை இறந்து கிடப்பதைக் கண்டு சிங்தை துடித்தாள்; நொந்து பதைத்தாள்: விரைந்து வந்து கண்ணனிடம் உரைத்துக் கதறி யழுதாள். தனக்குப் பெண்ணேக் கொடுத்த மாமனேக் கொன்ற தீயவன் யார்? என்று அந்த