பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3606 திருக்குறட் குமரேச வெண்பா தண்ணளி சிறிது மில்லாத் தாரகன் கிளர்ந்து வான்போய் மண்ணிடை மறிந்த தன்மை வன் சிறை இழந்த நாளில் திண்னிய மேரு இன்னும் செல்லலாம் கொல்லென் றுன்னி விண்ணிடை எழுந்து வல்லே வீழ்ந்ததே போலும் அன்றே. (கந்த-தாரகன் வதை) + தாரகன் மூண்டு போராடி வீரவேலால் மாண்டு மடிந்துள்ளமையை இவற்ருல் ஈண்டு அறிந்து கொள்கி ருேம். தண்அளி சிறிதும் இல்லாத் தாரகன் என்று குறித் திருத்தலால் இவனுடைய கொலேத் தீமைகளே அறிந்து கொள்கிருேம். செருவரும் என்று தெரிந்திருந்தும் ஒரு பாதுகாப்பும் செய்யாமல் களித்திருந்த இவன் உள்ளம் கலங்கி உருத்து இழிந்து அழிந்து ஒழிந்தான். செருவரு முன் சிறை செய்யாதவன் பருவரலோடு பதைத்து அழி வான் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து தெளிங் தது. இவனது அழிவு யாவர்க்கும் உவகையா கின்றது. வருவ துணரான் மதங்கொண் டிருந்தான் வெருவி அழிவன் விரைந்து. உறுவதை ஒர்ந்து செய். பூமிக்குச் சுமை. 570. பாரம் பொறேன்என்று பாரேனே கஞ்சனுயர் கோரம் புகன் ருள் குமரேசா-ஆரவே கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்ல தில்லை நிலக்குப் பொறை. (0) இ-ள். குமர்ேசா! கஞ்சனது கொடுங்கோல் ஆட்சியை வெறுத்து கிலமகள் ஏன் .ெ ஞ் ச ம் கொதித்தாள்? எனின், கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்; அது அல்லது கிலக்குப் பொறை இல்லை என்க. கொடுங்கோல் அரசன் கல்லாத புல்லரைத் துனே பாக அனேத்துக் கொள்வன்; ஆகவே பொல்லாத அவன் இவ்வுலகிற்குப் பெரிய கொடிய சுமையாம். ... ** -