பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3020 திருக்குறட் குமரேச வெண்பா மமதைகள் யாதும் இன்றி நின்ற இடத்திலேயே கின்து குளிர்ந்த நிழல் இனிய கனிகள் முதலிய அரிய பெரிய உதவிகளே யாவர் க்கும் யாண்டும் செய்து வருகின்றன: இவன் உயிர்க்கு உரிய நல்ல தன்மை இல்லாதிருந்தும் தன்னேயும் ஒரு மனிதனுக எண்ணிச் செருக்கி எவ்வழி யும் இறுமாந்து திரிந்து தன் வன்கண்மையில்ை எங் கும் புன்கண்மைகளே விளேத்துப் புலேயே புரிந்து வரு வன் ஆதலால் இவனது இருப்பு அருவருப்பும் வெறுப்பும் ஆன ஒரு கொடிய நெருப்பு என தேர்ந்தது. அல்லல் உற்றவர்களேக் கண்டு உள்ளம் இரங்கி உதவி புரிபவன் கருணே யாளன் ஆகின்ருன். ஆகவே இருமை இன் பங்களும் அவனுக்கு உரிமையாகின்றன. கடை நின் றவர் உறு கண்கண்டு இரங்கி உடையதம் ஆற்றலின் உண்டி கொடுத்தோர் படைகெழு தானே யர் பல்களி யானே க் குடை கெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே! (சூளாமணி) ஏழைகளுடைய துன்பங்களேக் கண்டு இ ச வ் கி அன்னம் கொடுத்தவர் பின்பு மன்னர் மன்னவராயப் இந்த உலகத்தை ஆளும் தலைமையைப் பெறுவர் என இது குறித்துள்ளது. - உறுகண் = துன்பம். அதைக் கண்டு இரங்குவது கண்ணுேட்டம். பிற உயிர்கள் பால் பரிவு கொண்டு உதவி புரிபவன் தன் உயிரைப் பொன் உயிராக உயர்த் திக் கொள்ளுகிருன். மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஒர் இனமாப் பொன்னின் பெயர் படைத்தால் போலாதே-கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவது ஆங்கே அளிப்பாரும் மக்களாம் ஆறு. (பெரும் பொருள் விளக்கம்: உருவத்தால் மக்கள் ஒத்திருந்தாலும் கண்ணுேடி இரங்கி யருள்பவர் பொன்போல் உயர்த்து விளங்குகின் றனர்; இரக்கம் அற்றவர் இரும்புபோல் இழிந்துள்ன னர். அவ்வுண்மையை இது ஒண்மையா யுணர்த்தி புளது. சிவ தயை மனிதனைத் தேவனுக்குகிறது.