பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் னே ட் ட ம் 30.43 மனிதன் உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்தாலும் கண்ணேடி இரங்கும் நீர்மை இல்லையானல் அவன் மனி தன் ஆகான். அவனது கண்ணும் கண் ஆகாது. காட்சி பும் காட்சி ஆகாது. உருவத்தால் மனிதனைப் போல் தோன்றிலுைம் உண்மையில் அவன் ஒரு மரமே. நீட்டோலே வாசியா நின்றன் குறிப்பறிய மாட்டா தவன் நன் மரம். (மூதுரை) அறிவில்லாதவனே மரம் என்று இது குறித்துளது: அருள் இல்லாதவனே மண்மரம் என இங்கு அறிகின்ருேம். வரக்கண்டு நாணுதே வல்லேயான் நெஞ்சே : மரக்கண்ணே மண்ணுள் வார் கண் என்று- இரக்கண் டாய் வாளுழுவை வெல்கொடியான் வண் புனல் நீர் நாடற்கென் தோளழுவம் தோன்றத் தொழுது. (முத்தொள்ளாயிரம்) தன் நெஞ்சை நோக்கி ஒரு தலைவி இவ்வாறு உரைத் துள்ளாள். பிரிவாற்ருமல் மறுகி யுழலுகிற எனது அவல நிலையை ஒரு சிறிதும் கருதாமல் வன்கண்ணராய் மன்னர் வராமல் நிற்கின்ருர்: மண்ணுலகை ஆளுபவர் கண் மரக்கண்ணுே ? என்று அவரை இரத்து வேண்டி விரைந்து கொண்டு வா ! என்று வேண்டியிருக்கிருள். இரக்கம் இல்லையானல் அந்த மனிதனது கண் மரக் கண்ணே என இது பழித்திருக்கிறது. மரத்திலுள்ள கணுக்களைக் கண் என்பது மாந்தர் வழக்கு. மண்ணுல் இயைந்த பாவைக்கும், மரத்தால்செய்த பொம்மைக்கும் கண்கள் அமைந்திருக்கும். ஆயினும் உயிர்க்குணம் ஆன அருள் இரக்கம் அவற்றில் இரா: ஆகவே கண்ணோடு இயைந்து கண்ணுேடாத கண் னுக்கு அந்த மண் மரங்களின் உருவங்களில் மருவி யுள்ள கண்ணே உவமை கூறலாகாதோ ? எனின், ஆகாது. ஏன் ? மண்மாண் புனை பாவை என முன்னம் குறித்தது போல் இங்கு விரித்திலர் என்க. எல்லாம் காணுகின்ற கண் தனக்கு நல்லதைக் காணுமையால் பொல்லாத மரம் எனப் புலேயடைய நேர்ந்தது. உரிய பயன் ஒழியவே பெரிய பழி ஆயது.