பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3048 திருக்குறட் குமரேச வெண்பா அழகான கண் முகத்தில் இருந்தாலும் அல்லல் அடைந்தவர்களேக் கண்டபோது இ ர ங் கி ஆதரித்து அருளவில்லையானல் அது பொல்லாத புலேக் குருடே. இரக்கம் மனிதனேத் தெய்வம் ஆக்குகிறது; இரக்க மின்மை அரக்கன் ஆக்கி அதோ கதியில் ஆழ்த்துகிறது. உண்மையான க ண் உடையவர் யார் ? கண் னேட்டம் உடையவரே, கண் இருந்தும் கடையான குருடர் யார் ? கண்னேட்டம் இல்லாதவரே. அருளேப் பேணிவரும் அளவே மனிதப் பிறப்பு பெருமை அடைந்து வருகிறது. எவனுடைய காட்சியில் இரக்கம் க னி ங் து இதம் சுரங்து வருகிறதோ அவனி உம் அதிசய மாட்சிகள் நிறைந்து வருகின்றன. ஏமாங்கத நாட்டிலே இராசமாபுரியிலே வழக்கப்படி வசந்தகால விழா நடந்தது. நகர் அயலே யிருந்த குளிர் பூம்பொழிலில் யாவரும் உல்லாசமாய் விருந்துகள் அருங்தினர். அதுபொழுது அங்கு ஒரு நாய் புகுந்தது. புகவே பார்ப்பனர் அதனைத் தடியால் அடித்து விரட்டி னர். அடியால் அது ச ா க நேர்ந்தது. அங்காய்க்கு உரியவன் வேதியரைத் துன்புறுத்தி வேதனை விளேத் தான். காளேப் பருவத்தனை சிவகன் அதனேக் கண்டு இரங்கின்ை; விரைந்து புகுந்து இதம் புரித்தான்; மரணம் அடைய நேர்ந்த நாய்க்கு அரணமாய் ஒரு மந்திரத்தை ஓதி உய்ந்து போகச் செய்தான். அக்குலமகனுடைய அருள் நீர்மையை நோக்கி யாவரும் வியந்து புகழ்ந்தார். நல்வினே ஒன்றும் இலாதவன் நான்மறை வல்லவர் தம்மை வருத்தலின், வல்லே செல்சுடர் வேல்வல சீவக சா மிசென்று - அல்லல் அகற்றி அருந்துயர் தீர்த்தான். (1), மீண்ட வர் ஏகுத லும் விடை அன்னவன் ஈண்டிய தோழரொடு எய்தினன் ஆகி மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது காண்டலும் கட்கினி யான் கலுழ்ந் திட்டான். (2).