பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306.6 திருக்குறட் குமரேச வெண்பா கடலில் இருந்து எழுந்த கொடிய நஞ்சை உண்டுண் காலனே அடக்கியும் சீவர்களுக்கு இரங்கிச் சிவபெரு மான் அருள் புரிந்துள்ள நீர்மையைப் பட்டினத்தனச் இவ்வாறு பொருள் புனேந்து பாராட்டி யுள்ளார். இருவர் மொழியும் கேட்டிகழா இருக்கு வேதம் ஆங்கு எய்திப் பருவ முகில் போல் நிறத்தோயும் பங்கே ருகமேல் உறைவோயும் விரியும் புவனம் அனைத்தினுக்கும் கடவுள் அல்லிர்; விரி கடலில் கருகும் விடம் உண்டு உ ைம அளித்த கருனேக் கடலே மு. த லாவான். (கூர்ம புராணம்} திருமாலேயும் பிரமாவையும் நோக்கி ஆதி வேதம் இவ்வாறு ஒதியுளது. கரிய கொடிய விடத்தை உண்டு தேவர் யாவரையும் சிவகோடிகளேயும் காத்தருளிய கருனேக் கடலான பரமனே முழு முதல் கடவுள் னைக் குறித்திருப்பது இங்கே கூர்ந்து சிந்திக்கவுரியது. விடம் கண்டு அஞ்சி விண்னவர் நடுங்கி அல்லல் உழந்த அவல நிலே யைக் கண்ணு தற் கடவுள் கண்டு கண்ணுே டிக் கண்ணிர் மல்கிக் காத்த காட்சியைக் கண்மணி மாட்சியாக் காட்டும் இன்றே. பிற உயிர்கள் துயர் உறக் கண்டால் கண்ணுேடி அருளுவது நல்ல புண்ணிய நீர் மையாளர் இயல்பு. கண் னுதல் கடவுள் கண்ணுேடி யருளிய பொழுது தோன் றிய கண்ணிர்த்துளிகளே உருத்திராட்சங்கள் என்று: பெயர் பெற்றுள்ளன என்னும் இது ஈண்டு எண்ணி யுணரத் தக்கது. அக்கம் = கண். கண்ணுேட்டத்தனன் அழுதபொழுது அதிலிருந்து எழுந்த துளிகள் அக்க மாமணி என மிக்க மகிமையுடன் அமைந்துள்ளன. பஞ்ச பாதகர் ஆயினும், பாவமே தஞ்சம் ஆகச் சரிப்பவர் ஆயினும், நஞ்சு அயின்றவன் நாமம் உரைப்பரேல்