பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தொன்பதாவது அதிகாரம் ஒ ற் ரு ட ல். அஃதாவது ஒற்றரை அரசன் ஆளும் திறம். ஒற்றர் ஆவார் பகைவர் உறவினர் முதல் எவரிடமும் சென்று அவரறியாவகை நின்று ஆங்கு நிகழ்ந்தவற்றை அறிந்து வந்து அரசரிடம் சொல்வோர். ஒற்றி அறிபவர் ஆத லால் ஒற்றர் என நேர்த்தார். சாரணர் எனவும், வேவு காரர் எனவும், உளவறிவோர் எனவும் இவர் கூறப்படு வர். கொடுங்கோன்மை ஒழிந்து, வெருவங்த செயல் இன்றிக் கண்ணுேட்டம் உடையராய்ச் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தர் அங்கங்கே நிகழ்வன வற்றைக் கூர்ந்து ஒர்ந்து கொண்டு ஆவன செய்தற்கு ஒற்றர் உற்ற துனேயா யுள்ளனர். ஆட்சி புரியும் அர சர்க்குக் காட்சி புரியும் கண்ணுய் ஒற்றர் கிற்றலால் கண்னேறட்டத்தின் பின் இது இனமா வைக்கப்பட்டது. அரசும் ஒற்றும் 58 1. ஒற்றரை முன் கண்ணு உவந்தேன் விசயதரன் கொற்றமுறக் கொண்டான் குமரேசா-உற்றறியும் ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். {*} இ-ள். குமரேசா ஒற்றரை ஏன் கண் ஆக விசயதரன் உவந்து கொண்டான் ? எனின், ஒற்றும் உரை சான் று. து.ாலும் இவை இரண்டும் மன்னவன் கண் தெற்று என்க. அரசுக்கு உரிய அரிய கண் அறிய வந்தது. ஒற்றரும் ஒளி கிறைந்த நூலும் ஆகிய இந்த இரண்டும் அரசன் கண்கள் ஆகத் தெளிந்து கொள்ள வேண்டும். ஒற்று என்னும் அஃறினேச்சொல் அரசு அமைச்க வேந்து என்பனபோல் உயர்தினேப் பொருளில்வந்தது. பால் விகுதி மறைந்து வருவதில் நிறைந்த பொருள் சிறந்து வருகிறது. நிலமையை கினைந்து தெளிக.