பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.074 திருக்குறட் குமரேச வெண்பா எங்கனும் பழமை யான இயல்மொழி எழுந்த தன்றே; இங்கவர் செயல்கள் சாரர் இசைநெறி இ ய லு ம் எங்கும். உற்ற சாரர் காட்சியாக ஆட்சி கடந்து வருதலையும் அரசனது கிலேமைகளேயும் இது காட்டியுள்ளது. சாரர்= ஒற்றர். சார்ந்து கின்று ஒர்க் து வருபவர் என்பதாம். உடல் உறுப்புக்களுள் கண் எப்படி மனிதனுக்குச் சிறப்போ அப்படி அரசனுக்கு ஒற்றன் உரியவனகிருன். தெற்று என் க = தெளிந்து கொள்ளுக. தேறுதல் என்பதன் அடியாக இது சேர்ந்து வந்துளது. ஒற்றசை யும் நீதி நூலேயும் உறுதித் துனேயாக மருவி எவ்வழி யும் செவ்வையாக ஒர்ந்து உணர்ந்து உரிமையோடு உலகைப் பேணி வர வேண்டும் என்று அரசுக்கு ஆணே கூறியுள்ளார். நீதி நூலே நன்கு ஒதி யுணர்ந்தும் ஒற்றசை உரிமை யுடன் ஆதரித்தும் வருகிற அரசன் எங்கும் அதிசய: மாட்சிகளே அடைந்து உயர்ந்து கொள்ளுகிருன். இவ்வுண்மை விசயதான் பால் தெரியவந்தது. ச ரி த ம். இக்கோமகன் இராசராசன் என்னும் சோழமன்னன் பேரன். அம்மன்னன் மகளாகிய தருமவதியை இசாச சிம்மன் என்னும் பாண்டியன் மணந்திருந்தான். அங்த வேந்தன் புதல்வயைப் இந்த ஏங்தல் பிறந்தான். மதுரை யம்பதியில் வளர்ந்து வந்தான். வருங்கால் அவ்வளவ. னுக்கு ஆண்மகவின்மையால் இவ்வழுதி வேங் தனிடம் வந்து இக்குலமகனேத் தனது அரசுக்கு உரிமையாகத் தரவேண்டினன். பாண்டியனும் பரிவுடன் தந்தான். ஈண்டிய உவகையுடன் இ க் கு ம ர சீன அழைத்துக் கொண்டு அவ்வளவன் சென்ருன். உரிய பருவத்தில் இவன் அரசுரிமையை அடைந்தான். உபய குலோத் துங்கன் என்று உலகம் புகழ்ந்து வர அரச குல திலகமாய் இவன் ஒளி மிகுந்து விளங்கி வக்தான்.