பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3088 திருக்குறட் குமரேச வெண்பா ஒற்றன் .ே ம லாய் கின்று அனைவரையும் விநயமா ஆராய்ந்து தெளிந்து கொள் கிருன். எதையும் கூர்ந்து ஒர்ந்து வேந்தனுக்கு உரிமை புடன் உண்மையை உரைப்பவனே நல்ல ஒற்றன. கிருன். இது சுவேதன் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் விதர்ப்ப தேசத்திலே சயபுரி என்னும் நக சில் இருந்தவன் வேதியர் மரபினன். வேதம் முதலிய கலைகளே ஒதியுணர்ந்தவன். மதியூகமும் சாதுரிய சாக சங்களும் உடையவன். அந்நாட்டு மன்னன் ஆன வீமன் இவனது மதிமாண் பை அறிந்து இவனே நண்புரிமை யோடு பேணி வங் தான். வருங்கால் தனது அருமைத் திருமகளான தமயந்தியை நளன் பிரிந்து போனதை அறிந்து உளம் மிக வருங்தினன். அவ8ளத் தேடி வரும் படி ஒற்றர் பலரை உய்த் தான். யாண்டும் காணுேம் என்று யாவரும் மீண்டனர். இந்த மறையவன் மாத்தி ரம் உறுதியோடு ஊக்கி முயன்ருன், சேதி நாட்டு அரச கிைய சுவாகுவின் அரண்மனேயில் இருப்பதை யூகித்து அறிந்து அங்கு நேரே போனன். தமயந்தியைக் குறிப் பால் கண்டான்; அவளது பரிதாப கிலேயைக் கண்டு பரிந்து அழுதான் அவளும் தெரிந்து தேம்பி அழுதாள். அவளது கிலேமை தலைமைகளே அரசிக்கு உணர்த்திச் சிவிகையில் ஏற்றித் தந்தையிடம் கொண்டு வந்து சேர்த்தான். ஒற்றர் யாவரும் செய்ய முடியாத அரிய செயலைச் செய்து முடித்த இவனே மன்னன் வியந்து மகிழ்ந்து புகழ்ந்து பரிசில்கள் பல தந்து வரிசைகள் மிகச் செய்தான். தாங்க வாரிதி சூழ்தரு தகைமைசால் உலகம் ஒருங்கு தேடியும் காண்கிலர் உலப்பிலார் திரிய, வரங்கொள் கேள்வியன் சுவேதன் என்றுரைக்கும் ஒர்மறையோன் கருங்கட் பேதையைச் சேதிபன் மனே வயின் கண்டான். (1):