பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3 || 07 புடன் அனுப்பினள். அங்த அருமைக் குழந்தைகளைக் கண்டவுடன் நளன் உளம் உருகி மறுகி அழுதான். மக்களே முன் காணு மன ம் நடுங்கா வெய் துயிராப் புக்கெடுத்து வீரப் புயத்தனேயா-மக்காள் நீர் என் மக்கள் போல்கின்றீர்: யார் மக்கள்? என்றுரைத்தான் வன்மக் களியானே மன். ( 1) மன்னன் நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள் யாம்; அன்னே தனக் கான்விட்டு அவன் ஏக -இந்நகர்க்கே வாழ்கின் ருேம்: எங்கள் வள நாடு மற்ருெருவன் ஆள்கின் ருன் என் ருர் அழுது. (2) ஆங்கவர் சொன்ன உரை கேட்டு அழிவெய்தி நீங்கா உயிரோடு நின்றிட்டான் -பூங்காவின் வள்ளம்போல் கோங்கு மலரும் திருநாடன் உள்ள ம்போல் கண்ணிர் உகுத்து. (3) (நளவெண்பா) எவருடைய உள்ளங்களும் உருகி மறுகி அழும்படி வந்துள்ள இந்தப் பிள்ளைப் பாசங்களே மானச நேர்க் கால் கூர்ந்து பாருங்கள். உரியவனே ஒர்ந்து தெளிதற்கு இக் குலமகள் செய்துள்ள உபாயத்தைக் காவியக் கவி யும் ஒவிய உருவமா வனேங்து வழங்கி யுள்ளார். அழலும் நீரும் இன்று அமிழ்தென அடுதொழில் கேட்டுக் குழையும் நெஞ்சினள் இன்னுயிர்க்கொழுநன் என்றுஎண்ணி விழைவி ைேடுதன் மக்களே அவன்உழை விடுத்தாள்; மழலை மென்மொழி மக்களும் மன்னன் மாட்டு அடைந்தார். அடைந்த மக்களைக் காண்டலும் அழலிடு மெழுகின் உடைந்தது உள்ளம் நீர் ஊற்றிருந்து ஒழுகின நெடுங்கண்: தொடர்ந்த மும்மலம் முருக்கிவெம் பவக்கடல் தொலேயக் கடந்து ளோர்களும் கடப்பரோ மக்கள் மேல் காதல்? (2) மழலை மென்மொழி மக்களைக் காண்டலும் மன்னன் அழுது துன்புறல் ஆய்வ8ளத் தோழி கண்டு ஏ.கித் தொழுது சொற்றலும் கொழுநனும் என்பது துணிந்து முழுவல் அன்புடைத் தாயொடு தந்தைபால்மொழிந்தாள் (3) (நைடதம்)