பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : 10 திருக்குறட் குமரேச வெண்பா ஒற்றர்கள் கூறிய உரைகளேக் குறித்து ஆராய்ந்து கூர்ந்து ஒர்ந்து உண்மை தெளிதலே. ஒற்று மாக்களே ஒற்றரின் ஆயா முற்றன க்கு உரைத்த மூவர் வாயவுள் ஒத்தது நோக்கி மெய்த்தகத் தேறி. (பெருங்கதை, 3-25). ஒற்றர் மூவர் வாய் உரைகள் சரியாக நேரே ஒத்த தேல் தேறுக என இது கூறியுளது. தேவர் வாய்மொழி யை இது தழுவி வந்துள்ளது. அவ் வுண்மையை உரைக் குறிப்புகளால் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். o ஒருவர் ஒருவர் தமை அறியாது ஒருமை வினைக்கண் மூவர்தமை மருவ விடுக்க; மூவர்களும் வந்து மொழிவது ஒத்துவிடின், கருமம் அதனை மிகத்தெளிக; கரும மறைப்ப வேண்டுதியேல் பொருவி லவர் தம் பால் சிறப்புப் புறம்தோன் ரு மல் செய்திடுக. (விநாயக புரான ம் , ஒற்று ஒற்று உணராமை ஆள்க என்னும் இக் குறளுக்கு ஒரு விரிவுரையாய் இது மருவி வந்திருத்த லேக் கருதி யுணர்க. என்றன ன் புத்தி சேன் என்னு நான் மறையினன் நன்றதே பொருள் என நால்வரும் இருந்துழி ஒன்றிமுன் விடுத்தவர் மூவர் ஒற் ருட்கள் வந்து இன்றிதால் பட்டது என்று இயம்புகின் ருர்களே. (சீவக சிந்தாமணி). ஒற்றர் மூவர் சொல்லே இதில் ஒர்ந்து கேட்டுள்ளனர். உளவறிந்து வருவாரைப் பல வகையிலும் ஆராய்ந்து உண்மை தெரிவதே மன்னர் முறைமையாம். இன்ன வாறு செய்து வருபவர் சிறந்து சீர் எய்தி வருகின்ருர். ஒற்றரை ஆய்ந்த திறம் உதயணன் பாலும். துரியோதனனிடமும் நன்கு தெரிய வந்தது.