பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 31 j 5 வகையினில் ஆற்றினவர்க்கு மறைய அமைத்தனன் என்றது இங்கே ஆய்ந்து சிந்திக்க வுரியது, உளவறிந்து சொல்லும் ஒற்றருக்கு உலகறியச் சிறப்புச் செய்யலாகாது என்ற தல்ை அவருடைய தொழிலும் துறைகளும் மறைகளும் தெரிய வங்தன. விரகறியும் ஒற்றரை விரகுடன் ஆள்பவர் வெற்றி வேங் தராய் விளங்கி எவ்வழியும் சிறந்து வருவர். இவ் வுண்மை சேரலாதன் பால் தெரிய வங்தது. ச ரி த ப் . இவன் சேரர் குலவேந்தன். சிறந்த நீதிமான். அரசியல் முறைகளேத் துறைகள் தோறும் நன்கு தெரிந்தவன். எதையும் கூர்ந்து ஒர்ந்து யாண்டும் செவ்வையாகச்செய்வதே இவனது சீர்மையாய்ச்சிறந்து வந்தது. பாதுகாப்பு முறையில் கோது யாதும் புகாமல் குறிக்கோளுடன் ஆற்றி வந்தான். கள்வர் முதலிய கொடியவர்களே அடக்கிப் பகைவரை ஒடுக்கி நாட்டை நன்கு பேணி வந்தமையால் இவன் புகழ் எங்கும் பரவி கின்றது. சதாயு,சமனகன் என்னும் ஒற்றர் இருவர் இவனுக்கு உற்ற துணேவராய் உதவி புரிந்து வந்தனர். கொடையும் வீரமும் சத்தியமும் கருமக் காட்சியும் இவனிடம் குடி கொண்டிருந்தன. மண்ணுடை ஞாலம் புரவு எதிர்கொண்ட தண்ணியல் எழிலி தலையாது மாறி மாரி பொய்க்குவது ஆயினும் சோலாதன் பொய்யலன் நசையே: இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கப் தன் கோல் நிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபின் ஆரியர் வணக்கி நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய்தலைப் பெய்து கைபிற் கொளி.இ அருவிலே நன்கலம் வயிர மொடு கொண்டு பெருவிறல் மூதுார்த் தந்துபிறர்க்கு உதவி