பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 i 24 திருக்குறட் குமரேச வெண்பா தேனுடைக் கமலத் திருவினுக்கு அரசே ! திரை கொள்மா நெடுங்கடல் கிடந்தாய் ! நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்; நைமிசா ர னியத்துள் எந்தாய் ! (4}. | (பெரிய திருமொழி) பொருளுடைமை கில்லாது நீங்கி விடும் என்று பரம னுடைய அருளுடைமையை நாடிப் பத்திப் பரவசராட்: இவ்வாறு பல நூறு பாடல்கள் பாடியிருக்கிருர். தன் உள்ளத்தின் ஊக்கத்தினலேயே அரச செல்வங்களேயும் அடைந்து முடிவில் முத்தித் திருவையும் பெற்றிருக்கின் ருர். உள்ளம் உடைமையே உண்மையான உடைமை என்பதை உலகம் காண இவர் உணர்த்தி யருளினர். ஊக்கம் உடைய உரவோன் உலகிலுயர் ஆக்கம் அடைவன் அமர்க்து. ஊக்கி உயர். - = - 593 ஊக்கத்தின் உறுதி. ஆக்கம் இழந்துமேன் ஆரியன் சோர்வின்றிக் கோக்குலச்சீர் கொண்டான் குமரேசா- நோக்கிநின்ற, ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார் (ங்) இ-ள். குமரேசா! செல்வம் இழந்தாலும் உள்ளம் தளரா மல் ஊக்கி நின்று ஆரியன் ஏன் அரசதிருவை அடைங் தான்? எனின், ஊக்கம் ஒருவங்தம் கைத்து உடையார் ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் என்க. ஊக்கம் உடையவர் ஆக்கம் அடைவர் என்கிறது. ஊக்கத்தை உறுதியாக வுடைய்வர் செல்வம் இழக் தாலும் அல்ல லுழவாமல் முயன்று ஆக்கம் பெறுவர். ஒருவந்தம்=உறுதி; நிச்சயம். ஒருவாமல் உறவாய் கின்று யாண்டும் உரிமை யுடன் உதவி புரிந்து வருவது இவ்வாறு உணர வந்தது.