பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. உஊ க்க ம் உ ைட ைம 31 31 உரிய உயர்வு நிலை உணர வந்தது. மலர்களின் நீளம் அவை மருவி யுள்ள நீர் நிலை அளவே. அதுபோல் மாந்தரது உயர்வு அவர்தம் உள். வாத்தின் கிலே அளவே யாம். நீரில் பூத்திருக்கும் பூக்கள் கிலத்தில் பூத்து வரு கிற மக்களுக்கு இங்கே தக்க உவமையாய் வந்துள்ளது. மலர் என்றது தாமரை அல்லி நெய்தல் முதலிய நீர்ப் பூக்களே. பொய்கை தடாகம் முதலிய நீர் கிலே களில் மலர்கள் மலர்ந்திருக்கும். அந்த நீர் எவ்வளவு உயர்ந்துளதோ அவ்வளவு உயரம் நாளங்கள் நீண்டு மலர்கள் வெளியே மலர்ந்து தோன்றும்; தண்ணிர் உய ரம் தாழ்ந்திருந்தால் மலர்களும் அந்த அளவே தாழ்ந்து கிற்கும். இந்த நிலைமை மனிதனது உயர்வுக்கு எடுத் துக் காட்டாக ஈண்டு இனிது இசைந்துள்ளது. கல்வி செல்வம் அதிகாரம் முதலிய கி லே க ளி ல் உயர்ந்து மனிதன் சிறந்து கிற்கின்றன். அந்த கிலே மைக்குத் தலைமையான மூலகாரணம் என்ன? அவனது உள்ளக் கிளர்ச்சியான நல்ல முயற்சியே யாம், உள்ளம் ஊக்கி எழாமல் மடிந்திருந்தால் அ ங் த மனிதன் ஆக்கம் இழந்தவய்ை இழிந்து நிற்பன். நீர், நீள நீள மலர் நீண்டு திகழும்; சலம் தாழத் தாழ மலரும் தாழ்ந்துபடும். நீர் நிலை மனிதனுக்கும். வெள்ளம் உள்ளத்திற்கும், மலரின் நீட்சி மனிதனது உயர்ச்சிக்கும் நேரே ஒப்பாம். நீர் அளவே ஆகுமாம் நீர்ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண்அறிவு. ஒளவையாரும். இவ்வாறு கூறி யிருக்கிரு.ர். உள்ளத்தின் அளவே மனிதன் உருவாகி வருகிருன் . அது நல்லதாய் உயர்ந்துவரின் நலம் பல பெருகி வர அவன் உயர்ந்து சிறந்து ஒளி மிகுந்து திகழ்கிருன்.