பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 136 திருக்குறட் குமரேச வெண்பா மனத்தின் மலர்ச்சி அளவே மனிதன் இனத்துயர்க் துள்ளான் எழுந்து. மனம் உயர மனிதன் உயர் கிருன். உயர்வே உள்ளுக. 596 தெள்ளு வசுமன் திரிசங் குயர்வுள் ளிக் கொள்ள நின்ருர் என்னே குமரேசா-எள்ளாமல் உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ள ல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (சு) இ-ள், குமரேசா. வசுமனும் திரிசங்கு மன்னனும் ஏன் உயர் கிலேயையே கருதி ஊக்கி முயன் ருர்? எனின், உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்று அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து என்க. உள்ள உரியன உணர வந்தன. எண்ணுவது யாவும் மேலான கிலேகளேயே எய்த எண்ணுக: அவை எப்தா விடினும் எய்திய படியாம். நீர்த்து = நீர்மையுடையது. நீர்மை = இயல்பு; தன்மை. உயர்வையே அயராமல் யாண்டும் எண்ணுக. உள்ளுவது என ஒருமையில் குறித்தது மனிதனது மனகிலே தெரிய வங்தது. ஒவ்வொன் ருகவே எதையும் விரும்பி எண்ணுவன்; அவ்வாறு எண்ணுவன பலவாம்: ஆகவே ஒருமையும் பன்மையும் இங்கே உடன் மருவி கின்றன. கருதிய அளவே காட்சி யுறுகிறது. உயர்வு என்றது எவ்வகையிலும் தலைமையான உயர்ந்த நிலைமையை உறுதியோடு மனிதன் எதை. எண்ணி வருகிருனே அதனேயே அவன் அடைய நேர் கிருன். கினேவின் நீர்மை அளவே மனிதனுடைய சீர்மை. கள் வெளியே தெரிய வருகின்றன. உள்ள ல் = உரிமையுடன் கருதுக.