பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 138 திருக்குறட் குமரேச வெண்பா -- கருதியபடி பலன் கை கூடாது போயினும் அங்தக் கருத்து மருமமாய் விருத்தி யடைந்து வியனை பயனே க பமாய் நன்கு அடைந்து கொள்ளும் ஆதலால் தள்ளி னும் தள்ளாமை நீர்த்து என்ருர், அரியதைக் கருதி ஆற்றுவதே பெரியர் இயல்பு. இசையும் எனினும் இசையாது எனினும் வசைதீர எண்ணுவர் சான்ருேர்-விசையின் நரிமா உளம்கிழித்த அம்பினில் தீ தோ அரிமாப் பிழைப்பெய்த கோல். (நாலடி: 1 52) மேலோர்கள் எவ்வழியும் உயர்நிலைகளேயே எண் ணுவர் : அவை கைகூடாது ஒழியினும் கவலையுருர்: நரி, யைக் குறி தவருமல் எய்து வெல்வதினும் சிங்கத்தை எய்து வெல்லாது போயினும் அது மேன் மையேயாம். இதில் குறித்துள்ள குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரிச் யன. நரி இழிவுக்கும், அரி ஏறு உயர்வுக்கும் உரியவாம். கான முயல் எய்த அம்பினில் யானே பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (குறள் 772) இதுவும் ஈண்டு இனமா எண்ணி புணரவுரியது. சிறியதை எண்ணித் தவருமல் பெறுவதினும், பெரியதை உள்ளிப் பெருமல் தவறி விடினும் அது பெருமையே. இந்தக் கருத்தை மேலே கு றி த் த ை தெளிவாக வலியுறுத்தி யுள்ளன. 2 Dream mainfully and nobly and thy dreams shall be prophets. (Bulwer) ' உயர்வையே உறுதியாயப்க் கருதுக: அ ங் த உள்ளக் கருத்துக்கள் தீர்க்க தரிசனங்களாம்" என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர வுரியது. In great attempts it is glorious even to fail. (Longinus) 'பெரிய முயற்சிகளில் உரிய பலன் தவற நேரினும் அது மகிமையே யாம்' என இது குறித்துள்ளது.