பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I 48 திருக்குறட் குமரேச வெண்பா -ஈவார் மேல் கிற்கும் புகழ், ஈவானே தெய்வம்' என இவ்வாறு இசைபெற்றுவந்துள்ளமையால் வண்மையின் உண்மையான தலைமையை ஒர்ந்து கொள்கின்ருேம். எல்லாரும் வள்ளல்க ளாக முடியாது. மேலான பிறவியில் அரிதாக மேவி வந்துள்ளவரே வள்ளல் என விளங்கு கின்றனர். * - நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணன்; ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன்று ஆற்றக் கொடுக்கும் மகன் தோன்றும்;தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை இரப்பாரை எள் ளா மகன். o (தகடுர்} இரப்பவரை எள்ளாமல் ஈகின்ற மகனே இவ்வுலகில் காண்பது அரிது என இது காட்டியுளது. வள்ளல் என வருபவர் எவ்வளவு அரிய கிலேயினர்! என்பதை இதல்ை தெரிய லாகும். மனித உருவில் மருவி யிருந்தாலும் வண்மையாளன் உண்மையான தெய்வ மாகவே ஒளி பெற்று உயர்ந்து வருகின் ருன். அரிய மகிழ்ச்சியும் பெரிய உயர்ச்சியும் ஈகையில் உள்ளன. அதனே யுடையவர் உயர்ந்து திகழ்ந்தார்: இழந்தவர் இழிந்து கழிந்தார். ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்? தாமுடைமை வைத்திழக்கும் வன் க னவர். (குறள்: 228) ஈயாமல் பொருளே இறுகப் பொத்தி வைத்தும் பேயாயிழிந்து பிழையா ஒழிந்து போகிற உலோபிகள் ஈதலில் கனிந்துள்ள அரிய இன்பத்தை அறியாமல் அவமே அழி கின்ருர்களே! என்று தேவர் பரிதாபமாகப் இரங்கி யிருப்பதை இதில் அறிந்து கொள்கின்ருேம். ஈதல் இன்பம் காதல்இன்பம் போல் தமக்குள்ளேயே உணர்ந்து கொள்வது ஆதலால் வள்ளியம் எனத் தன்மைப் பன்மையில் உரைத்தார். செருக்கு என்று இங்கே குறித்தது சிறந்த மேன்மை யில் சுரங்து எழுகின்ற உயர்ந்த மன மகிழ்ச்சியை. o