பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 16.9 மாசின் பேர் கறை களங்கம் - மலினம் ஆம் கசடும் அப்பேர். (நிகண்டு) கசடும் மலினமும் கறையும் அழுக்கும் மலமும் களங்கமும் மாசு ஆகும்மே. (பிங்கலந்தை) மாசுக்கு உரிய பரியாயப் பெயர்களே இவை குறித் துள்ளன. காரணக் குறிப்புகள் கருதி உணர வுரியன. மடி என்னும் புலையான மாசு படியாமல் தம் உள்ளத்தைப் பேணி ஊக்கி வருபவரே ஆக்கம் மிகப் பெற்றுக் குடியை விளக்கி நெடிய புகழோடு என்றும் நலமாய் கின்று விளங்குவர். மாசு என்பதற்கு இருள் என்று பொருள் கொண்டு இந்தக் குறளுக்கு உரை குறித்துள்ளாரும் உளர். விளக்குப் புக இருள் மாயுமே அன்றி இருள் ஆனது விளக்கை மாய்த்தல் யாண்டும் இல்லை; அ வ் வா று உரைத்தல் இயற்கை நியதிக்கு மாரும்; ஒ எளி ைய மாய்க்க வல்ல ஒர் இருள் என்று புதுமையாகப் படைத் துக் கூறின் உலகம் மலைவாம்; உண்மை குலைவாம்: ஆகவே அங்ங்னம் குறிப்பது சிறப்பாகாது. ஆவதை ஆய்ந்து அமைதியைத்தெளிவது அறிவுடையார் கடனே. உள்ளக் கிளர்ச்சி யின்றி எவன் சோம்பித் திரிகின் ருனே அவன் தேம்பி அழிவான்; அவன் பிறந்த குடியும் இருந்த இடம் தடங்தெரியாமல் அழிந்து ஒழிந்து போம். அவ்வாறு போகாதபடி மாந்தர் ஒர்ந்து முயன்று யாண் டும் உயர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பு. மடி தோய்ந்தவன் குடி அடியோடு மாய்ந்து கெடும். இந்த வுண்மை ஆத்திரேயன் பால் அறிய வங்தது. ச ரி தம் . இவன் சோழநாட்டிலே வேதி மங்கலம் என்னும் ஊரில் இருந்தவன். வேதியர் மரபினன். தந்தை பெயர் அத்திரிநாதன். ஒரே புத்திரன் ஆதலால் பெற்ருேர் இவனே மிக்க பிரியமாய்ப் பேணி வளர்த்தனர். இளமை 397