பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3°176 திருக்குறட் குமரேச வெண்பா கஅளயே தரவுரிய புலையான சோம்பலை ஒருவன் மருவிக் கொள்வது பழிதுயரமான இழி மடமையாம். தான் பிறந்த குடியை ஊக்கி முயன்று சிறந்த நிலை யில் விளங்க வைப்பவன் உ ய ர் ங் த மேதையாய்த் துலங்கி நிற்கின்ருன். அவ்வாறு முயலாமல் மயலாய் மருண்டு சோம்பி மயங்கி இருப்பவன் இழிந்த பேதை பாய்க் கழிந்து ஒழிந்து போகின்ருன். மடியை மடித்து ஒழுகுபவன் தன் குடியை உயர்த் துகிருன் என்பதை முன்னம் அறிந்தோம்; மடியை மடிக் கொண்டவன் தன் குடியைக் கெடுத்துத் தானும் இழி மகனுய் அழிகிருன் என்பதை இதில் அறிந்து கொள் கிருேம். மடிமடி என்பதை வினைத்தொகையாக் கொண் டால் தன் அனயும் தன் குடியையும் கெடுத்து அழிக்கின்ற சோம்பல் என்று கொள்க. கேடான மடியைக் கூடிக் களிப்பது மூடக் களிப்பாய்ப் பீடையுற்று கின்றது. பொய்யும் நோயும் புடைவையும் சோம்பும் ് : புலம்பும் கேடும் அடக்கமும் தாழையும் வயிறும் மடங்கலும் மடிஎனல் ஆகும்.

  • (பிங்கலந்தை)

மடி என்னும் ஒரு சொல்லுக்கு இவ்வாறு பல பொருள்கள் வந்துள்ளன. காரணக் குறிப்புகள் இவற். றுள் கலந்திருக்கின்றன. கருதி உணர்ந்து கொள்க. சோம்பலுடையவன் யாதொரு தொழிலும் செய் யான்; ஆகவ்ேபொருள் வருவாய் இல்லை. இல்லாமையே இல்லுள் ஒல்லையில் புகுந்து கொள்ளும்; கொள்ளவே அந்தக் குடி அல்லல் பல அடைந்து அலமந்து அழிந்து போம். அவ்வாறு தன் குடி அழியினும் அ க் த மடி கொண்ட மடையன் விதி முடியும் அளவும் சாகாமல் செத்த சவமாய்த் திரிவன் ஆதலால் அவனினும் முக்தி அக் குடி மடியும் என்ருர். மடியன் மா ப்ங்து படுமுன் அவன் குடி மிடி வாய்ப் பட்டுத் தேய்ந்து அழிந்து போம். தான் பிறக்த குடி இருந்த இடமும் தடத் தெரியாமல் ஒழிந்து போயினும்