பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3177 சோம்பேறி யாதும் நாணமல் ஏதும் கவலாமல் ஈனமாய் இழிந்து திரிவன் என்பது தெரிய வந்தது. சிற்றெறும்பு ஆதியாச் சிவ கோடிகள் முற்றும்மெய் உழைத்துயிர் முறையில் காக்குமால்; சற்றும்மெய் அசைவிலாச் சழக்கர் ஆருயிர் அற்ற ஓர் சவங்கொல்? மற்று அசர மேகொலோ ? (நீதி நூல்) சிறிய எறும்பும் கூட உழைத்துத் தன் வாழ்வை வளம்படுத்திக் கொள்கிறது; உயர்ந்த மனிதன் எனப் பிறந்தும் சிறந்த முயற்சியைச் செய்யாமல் இழிந்து சோம்பேறியாய்க் கழிந்து திரிபவன் நடைப்பினமே யாவன் என இது பழித்துளது. சோம்பி இராதே; அது கொடிய புலே: நெடிய பழி: அதனேக் கடிது நீக்கி ஊக்கி முயற்சி செய்து உயர்க, மடியை மருவினவன் குடி கெடும். இது கவுற்சனன் பால் தெரிய வந்தது. ச ரி தம் . இவன் தொண்டை மண்டலத்திலே காஞ்சிநகர் அருகே யிருந்த வாஞ்சி என்னும் ஊரில் இருந்தவன். மறையவர் மரபினன், குற்சன் என்னும் வேதியன் புதல் வன். நீதி நெறியுடைய அத் தந்தைக்குத் தீது வழி படிந்த இந்த மைந்தன் தோன்றியது விந்தையாய் நின்றது. கல்ல குலத்தில் பிறந்திருந்தும் பொல்லாத புலேகளில் பழகி எல்லாரும் எள்ளி இகழ இவன் இழிந்து திரிங் தான். யாதொரு தொழிலும் கருதாமல் வீணே சோம்பி வெய்ய நிலைகளில் அலைந்து விருதாவாய் உழந்து நின்ற இவனே வையம் இகழ்ந்து வைது வந்தது. மரபு சேர் குற்சன் என்னும் மறையவன் தனக்குப் பாபர் இருவரும் உச்சம் ஏறச் சுபர் எலாம் நீசம் எய்த உரகரும் காரி சேயும் உதித்திட உதித்தான் மன்னே! 398